நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 12 பேர் கைது
நாகப்பட்டினம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து ஒரு விசைப்படகை பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இலங்கை கடற்படையால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

நம் நாட்டு எல்லைக்குள் மீன்பிடித்தாலும் கூட எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.
மேலும் நடுக்கடலில் மீன்பிடிக்கும்போது அங்கு வரும் இலங்கை கடற்படையினர் மீனவர்களை துன்புறுத்துவதோடு, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக உள்ளது. சில நேரங்களில் துப்பாக்கிச்சூடும் நடத்தி மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்களும், தமிழக அரசும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணவில்லை. இந்நிலையில் தான் தற்போது நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் நெடுந்தீவு அருகே விசைப்படகில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்தததாக கூறி நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்து சென்றனர்.
கைதான மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மீனவர்களை மீட்டு தமிழகம் அழைத்து வர வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications