பேசிட்டே.. தாம்பரத்தில் ஸ்வேதா கழுத்தை அறுத்த ராமச்சந்திரனை நினைவிருக்கா? இப்ப புளிய மரத்தில் தற்கொலை
தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் ஸ்வேதாவை கொலை செய்த ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
நாகை: தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில், மாணவி ஸ்வேதாவை அன்று கொன்றபோதே, ராமச்சந்திரன் தானும் தற்கொலைக்கு முயன்றார்.. கழுத்தையும் அறுத்து கொண்ட நிலையில் உயிர் பிழைத்தார்.. இப்போது இந்த துயரம் நடந்துள்ளது.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, அதாவது 2021ம் ஆண்டு, செப்டம்பர் 23ம் தேதி சென்னை தாம்பரத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்டது தமிழகத்தை உலுக்கியது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.. 27 வயதாகிறது. இவர் ஒரு என்ஜினீயரிங் பட்டதாரி.

வாக்குவாதம்
சென்னை குரோம்பேட்டை ராதா நகரை சேர்ந்த சுவேதா என்பவரை காதலித்து வந்துள்ளார்.. சுவேதாவுக்கு 21 வயதாகிறது.. லேப் டெக்னீசியன் ஆவார். 2 பேருமே ஒருவரையொருவர் விரும்பி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.. கடந்த 2021, செப்டம்பர் 23-ந் தேதி சென்னை தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் ராமச்சந்திரனும், சுவேதாவும் பேசிக்கொண்டு இருத்தனர்.. பிறகு அவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது. அப்போது ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவின் கழுத்தில் குத்தியுள்ளார்.

அலறல் சத்தம்
உடலில் 6 இடங்களில் குத்துப்பட்ட ஸ்வேதா அங்கேயே விழுந்து இறந்துவிட்டார்.. உடனே அந்த இளைஞரும் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.. இவ்வளவும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துள்ளது.. சுவேதாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பயணிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.. பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரத்தை பார்த்த அவர்கள், 2 பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... உடனடியாக போலீசுக்கும் தகவல் சொல்லப்பட்டு விசாரணையும் ஆரம்பமானது..

ரூம் மேட்
ஸ்வேதாவின் அப்பா மதியழகன், அரசு பஸ் டிரைவராக வேலை பார்க்கிறார்.. ஸ்வேதாவை லேப் டெக்னீஷியனுக்கு படிக்க வைத்துள்ளார்.. அதேபோல ராமச்சந்திரனும் பிஈ பட்டதாரியாம்.. ஸ்வேதாவுக்காகவே சென்னையில் ரூம் எடுத்து தங்கி ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் ஒருநாள் ஸ்வேதாவின் வீட்டுக்கு தெரியவந்ததும், மகளை கண்டித்துள்ளனர்... இதனால் ஸ்வேதாவும், 4 மாதங்களாக ராமச்சந்திரனிடம் சரியாக பேசாமல் ஒதுங்கி சென்றுள்ளார்.. காதலையும் முறித்து கொள்வதாக ராமச்சந்திரனிடம் சொல்லி உள்ளார்.. இதுதான் இவர்களுக்கிடையே தகராறாக உருவெடுத்துள்ளது.

ராமச்சந்திரன்
அதனால், தனக்கு கிடைக்காத காதலி யாருக்கும் கிடைக்க கூடாது என்ற முடிவில்தான் ரயில்வே ஸ்டேஷனுக்கு சம்பவ தினத்தன்று வந்துள்ளார்.. கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்று சொல்லி, ஸ்வேதாவையும் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைத்து, கொடூரமாக கொலை செய்துவிட்டார். ஸ்வேதாவின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு, ராமச்சந்திரனும் கழுத்தை அறுத்து கொண்டார்.. இதனால் ரத்தம் கொட்டி அங்கேயே சுருண்டு விழுந்து துடிதுடித்து உயிருக்கு போராடினார்.. பின்னர் கழுத்து அறுபட்ட நிலையில் ராமச்சந்திரன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதற்கு பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டார்..

புளியமரம்
இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்தனர்.. ஒரு வருடம் சிறை தண்டனையை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்தார் ராமச்சந்திரன்.. எனினும், இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் நடந்து வந்ததால், நேற்றைய தினம் கோர்ட்டில் ஆஜராக வேண்டியிருந்தது.. இந்நிலையில், தன்னுடைய சொந்த ஊரில் இருந்த ராமச்சந்திரன், நேற்று திடீரென தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறிய அவரது உறவினர்கள் வலிவலம் போலீசாருக்கு தகவல் சொல்லி உள்ளனர்.

புளிய மரம்
போலீசார் விரைந்து வந்து, ராமச்சந்திரன் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.. தன்னுடைய சொந்த ஊரில் தற்போது தங்கியிருந்தாலும், எந்நேரமும் ஸ்வேதாவின் நினைவிலேயே அவர் இருந்ததாக கூறப்படுகிறது.. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் படுத்திருந்தவர் திடீரென காணாமல் போனதால் பெற்றோர் அவரை தேடிச்சென்றுள்ளனர். அப்போதுதான் வீட்டின் பின்புறப்பகுதியில் உள்ள புளியமரத்தில் பிணமாக தொங்கியதை கண்டு அலறி துடித்தனர்.. ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளிவந்த, இளைஞர், காதலி நினைவாகவே தவித்து வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..!
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications