Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா.. இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று மாலை தொடங்க உள்ளது. நாகை மாவட்டத்தில் வரும் செப். 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயம், உலகப்புகழ் பெற்ற கிறிஸ்துவ பேராலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.

Velankanni Nagapattinam

இதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடக்கிறது. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் அருட்சகோதரிகள் கலந்துகொள்கிறார்கள். விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.

10 நாட்கள் நடைபெறும் இந்த பேராலயத் திருவிழாவை காண வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து கடலில் நீராடிவிட்டு, வேளாங்கண்ணி பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான தங்குமிடம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வேளாங்கண்ணி பேரூராட்சி மற்றும் பேராலய நிர்வாகம் செய்து வருகின்றன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்றுள்ளன.

இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக திருக்கொடி ஊர்வலமும், தேர்பவனியும் நடைபெறும். இந்த விழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். பெருவிழாவின் போது வாண வேடிக்கைகள் கோலாகலமாக நடைபெறும். இந்த விழாவிற்காக மின்விளக்குகள் அனைத்தும் பொருத்தப்பட்டு அந்த சுற்றுப்பகுதி முழுவதும் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை அறிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆரோக்கிய அன்னை திருவிழா (அன்னையின் பிறந்தநாள் விழா) வருடாந்திர விருந்து நாளான செப்டம்பர் 8-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 20-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+