மோடி வரும் போது உங்களால் கரண்ட் கட் பண்ண முடியுமா சிஎம் சார்? மிரட்டி பார்க்கிறீங்களா? விஜய் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

நாகை: நான் மக்களை சந்திப்பதற்கு ஏகப்பட்ட தடை.. ஏன் இவ்வளவு கட்டுப்பாடு.. நம் நாட்டின் பிரதமர் மோடி இங்கே வருவார் என்று வச்சுக்கோங்க.. ஒரு மத்திய அமைச்சர் வருகிறார்கள்.. மத்திய உள்துறை அமைச்சர் வருகிறார் என்று வைத்துகொள்ளுங்கள். அப்போது நீங்க இந்த மாதிரி ஒயர் கட் பண்ணுவீங்க.. கட் பண்ணி தான் பாருங்களே.. என்ன மிரட்டி பார்க்கிறீங்களா சிஎம் சார்? என நாகையில் விஜய் ஆவேசமாக பேசினார்.

நாகையில் இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

vijay-nagai-can-you-cut-power-when-modi-comes-cm-sir-vijay-fiery-question

ஏங்க இவ்வளவு கட்டுப்பாடு

நம் மக்களை சந்திக்கிறதற்கு, நம் சொந்தங்களை சந்திப்பதற்கு எத்தனை கட்டுப்பாடுகள்.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.. அந்த இடத்தில் பெர்மிஷன் இல்லை.. இந்த இடத்தில் பெர்மிஷன் இல்லை.. அங்கே பேசக்கூடாது.. இங்கே பேசக்கூடாது.. அதற்கான காரணத்தை கேட்டால் சொற்ப காரணமாக தான் இருக்கும்.

5 நிமிஷம் தான் பேசனும்.. அதை பேச கூடாது.. இத பேசக்கூடாது.. நான் பேசுறதே 3 நிமிஷம் தான்.. இதில இவ்வளவு கட்டுப்பாடு.. நான் அரியலூருக்கு போகும் போது அந்த ஏரியாவிலேயே பவர் கட்.. திருச்சியில் பேச ஆரம்பித்தபோது மைக்கில் இருந்து ஸ்பீக்கருக்கு போகின்ற ஒயர் கட்.. நான் தெரியாமல் தான் கேட்கிறேன் சி.எம் சார்..

மோடி வரும் போது கட் பண்ண முடியுமா

ஒரு உதாரணத்திற்கு கேட்கிறேன்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் இங்க வருகிறார் என்று எடுத்துக்கோங்க.. நம் நாட்டின் பிரதமர் மோடி இங்கே வருவார் என்று வச்சுக்கோங்க.. ஒரு மத்திய அமைச்சர் வருகிறார்கள்.. மத்திய உள்துறை அமைச்சர் வருகிறார் என்று வைத்துகொள்ளுங்கள். அப்போது நீங்க இந்த மாதிரி கண்டிஷன்கள் எல்லாம் போடுவீங்க.. இந்த மாதிரி பவர் கட் பண்ணுவீங்க.. இந்த மாதிரி ஒயர் கட் பண்ணுவீங்க..

கொஞ்சம் கட் பண்ணி தான் பாருங்களேன்.. முடியாதுல்ல.. பேஸ்மெண்ட் அதிரும்ல.. அது சரி.. நீங்க தான் மறைமுக உறவுக்காரர்கள் ஆச்சே.. இதையெல்லாம் பராவாயில்லை.. இத தாண்டி ஒரு கண்டிஷன் போடுறாங்க.. பஸ்சுக்குள்ளேயே இருக்கனுமாம்.. பஸ்சை விட்டு வெளியே வரக்கூடாதாம்.. கையை தூக்கக்கூடாதும்.. கையை இப்படியே வச்சுக்கொண்டு வரனுமாம்..

மிரட்டி பார்க்குறீங்களா..

மக்களை பார்த்து சிரிக்காதீங்க.. நானும் என்னம்மோ எதோன்னு நினைச்சேன்.. செம்ம காமெடியாக இருக்குங்க.. எல்லாத்தையும் நானும் ரசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.. நேரடியாகவே கேட்கிறேன் சிஎம் சார்.. மிரட்டி பார்க்குறீங்களா.. அதுக்கு நான் ஆள் இல்லை சார்.. என்ன செஞ்சிடுவிங்க அதிகபட்சமாக... கொள்கையை சும்மா பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கிற உங்களுக்கே இவ்வளவு இருந்தால்.. சொந்தமாக உழைத்து சம்பாதிச்ச எனக்கு எவ்வளவு இருக்கும்..

நீங்களா நானா என பார்த்துடுவோம்

என்ன நாங்க பெருசா கேட்டுட்டோம்.. மக்களை வந்து பார்க்கிறதற்கு ஃப்ரீயா உள்ள ஒரு இடம்.. ஆனால் அந்த இடத்தை எல்லாம் விட்டுவிட்டு, மக்கள் நெருக்கடி மிகுந்த இடம்.. மக்கள் எங்கெல்லாம் அதிகமாக இருக்காங்களோ அங்கே தான் அனுமதி கொடுக்கீங்க.. உங்க எண்ணம் தான் என்ன சார்.. அவங்களுக்கான குறைகளை கேட்கக் கூடாது.. அவங்களுக்காக பேச கூடாது.. அரசியல் தலைவன் என்பதை எல்லாம் மறந்துட்டு, நான் ஒரு மனிதனாக என் மக்களை சந்திப்பேன்..

வரும் 2026 தேர்தலில் இரண்டே பேருக்கு நடுவில் தான் போட்டியே.. ஒன்று டிவிகே, இன்னொன்று திமுக.. நேர்மையாக தேர்தலை சந்திப்போம்.. கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு கொள்ளையடித்து கொண்டு இருக்கும் நீங்களா இல்லை தமிழ்நாட்டு மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற நானா என்று பாத்துடுவோம்... இந்த போர் முழக்கம் உங்களை ஒரு நிமிஷமும் தூங்க விடாது.. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+