Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படார்.. கலெக்டர் ஆபீசில் வெடித்த துப்பாக்கி! ரத்த வெள்ளத்தில் சரிந்த அபிநயா..ட்யூட்டியில் சோக முடிவு

Subscribe to Oneindia Tamil

நாகை: நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கழுத்தின் இடது பக்கத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தின் காவல் துறையில் ஏராளமான பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். ஐபிஎஸ் அந்தஸ்து தொடங்கி இரண்டாம் நிலை காவலர், ஆயுதப்படை காவலர் என பல நிலைகளில் பெண் காவலர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

குறிப்பாக வங்கி ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கருவூலம், பதிவுத்துறை மற்றும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறைகளின் பெண்கள் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.

nagapattinam crime police

அப்படி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருவூல அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர் தான் அபிநயா. மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு தான் காவலராக பணியில் சேர்ந்தார். நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப் படையில் பெண் காவலராக பணியாற்றிய இவர் அங்குள்ள போலீஸ் கோட்ரஸில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் மாவட்ட கருவூல அலுவலகத்தில் துப்பாக்கியுடன் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் அபிநயா ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு அபிநயாவும் இன்னொரு பெண் காவலரான சினேகாவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காலை 6 மணி அளவில் பாதுகாப்பு பணியில் இருந்த அபிநயா துப்பாக்கியுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக பெண் காவலரான சினேகா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் அபிநயாவை தேடியதாக கூறப்படுகிறது. ஆனால் அவரை காணவில்லை. இந்த நிலையில் அவர்கள் பணியில் இருந்த போது ஒரு அறை மூடப்பட்டு இருந்தது.

இதை அடுத்து சந்தேகம் அடைந்த சினேகா உயர் காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்குள்ள நாற்காலியில் அமர்ந்தபடி அபிநயா தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இடது கழுத்து பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் அந்த அறை முழுவதும் ரத்தக் காடாக காட்சியளித்தது.

தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் தோட்டா, துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அபிநயா உயிரிழந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்து வருகின்றனர். மேலும், பணி அழுத்தம் காரணமாக அபிநயா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்றும் விசாரணை நடக்கிறது.

Note: தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+