Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதார் அட்டை.. தமிழக தபால் நிலையங்களில் சத்தம் இல்லாமல் நடந்த சூப்பர் விஷயம்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: தமிழகம் முழுவதும் தலைமை தபால் நிலையங்கள் ஆதார் சேவைக்காக கூடுதல் நேரம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற 16-ந் தேதி முதல் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்களுக்கான ஒரு தனித்துவ அடையாள எண்ணாக ஆதார் எண் இருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரைஅரசின் எந்த சான்றிதழ் வாங்கவும் ஆதார் கண்டிப்பாக வேண்டும். ஆதார் அடையாள அட்டையுடன் வங்கி கணக்கு, பான் கார்டு, மின் இணைப்பு, ரேஷன் கார்டு, அஞ்சல் கணக்கு உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளதால் ஆதார் எண் மூலம் அனைத்து சேவைகளையும் எளிதாக பெற முடிகிறது. அரசு ஒருவரை பற்றிய அனைத்து தகவல்களையும் ஆதார் எண்ணை போட்டு கண்டுபிடித்து விடவும் முடியும்.

 Aadhaar correction: Super thing happened in Tamilnadu post offices

ஆதார் இருந்தால் மட்டுமே அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற முடியும் என்பதால், ஆதாரில் உள்ள பெயர், முகவரி, செல்போன் எண் போன்ற எந்த திருத்தம் என்றாலும் இ சேவை மையங்களை நாட வேண்டி உள்ளது. அதேநேரம் அனைத்து தபால் நிலையங்களும் இந்த சேவைகளை செய்து வருகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி தபால் கோட்டத்தின் கீழ் உள்ள 44 தபால் நிலையங்களில் வருகிற 16-ந் தேதி முதல் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கோட்ட தபால் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பொதுமக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு ஏற்பாட்டை விரிவு செய்யும் விதமாக கன்னியாகுமரி தபால் கோட்டத்தின் கீழ் உள்ள 44 தபால் நிலையங்களில் வருகிற 16-ந் தேதி முதல் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்பட உள்ளது.

இதில் புதிய ஆதார் பதிவு இலவசமாக செய்யப்படுகிறது. மேலும், பெயர், முகவரி, மின்னஞ்சல், செல்போன், பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம், மாற்றம் செய்யவும், 10 ஆண்டுகளுக்கு மேலான ஆதார் எண்களை புதுப்பிக்கவும் ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆதாரில் இருக்கும் கைரேகை மற்றும் கருவிழி தகவல்களை புதுப்பிக்க ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உரிய சான்றுகளோடு அருகில் இருக்கும் தபால் நிலையங்களை அணுகி இந்த சேவையைப் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு கூறியுள்ளார்.

மதுரையில் உள்ள தலைமை தபால் நிலையம் மற்றும் அரசரடி தபால் நிலையம் தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் ஆகிய அலுவலகங்களில் ஆதார் சேவைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பொதுமக்களின் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களுக்கான தேவைகளை கருத்தில் கொண்டு சிவகங்கை கோட்டத்தில் உள்ள சிவகங்கை மற்றும் மானாமதுரை தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு, திருத்த சேவைகள் நடைபெற்று வருகிறது.

இந்த பகுதிகளில் மட்டுமல்ல சேலம், தேனி, திண்டுக்கல், சென்னை,திருச்சி, திருநெல்வேலி,திருப்பூர், ஈரோடு, தஞ்சை, வேலூர், விழுப்புரம் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும் ஆதார் சேவைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பெயர், முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பாலினம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் அதற்கு உரிய சான்றுகளுடன் ரேஷன் ஸ்மார்ட் கார்டு, தபால் நிலைய அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆயுள் காப்பீடு சான்றிதழ், கல்வி நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை கொண்டு வர வேண்டும். செல்போன், மின்னஞ்சல் மாற்றம் செய்ய எந்த ஒரு அடையாள ஆவணமும் பொதுவாக தேவையில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+