தமிழகத்தில் ஆட்சி கலையாது... ஸ்டாலின் ஒரு இலவு காத்த கிளி... பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பே இல்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 8 வழிச்சாலை விவகாரத்தில் தமிழக அரசு சிந்தித்து முடிவு எடுக்கும் என்றும் இந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கும், அந்த பகுதி மக்களுக்கும் எது நன்மையோ அதை நிச்சயம் செய்வார்கள் எனவும் கூறினார்.

AIADMK rule will not fall In Tamil Nadu Says Pon. Radhakrishnan

மேலும், டெல்லியில் போராட்டம் நடத்திய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணுவை ஆறு முறை சந்தித்துப் பேசியிருப்பதாக கூறிய பொன். ராதாகிருஷ்ணன்,

தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களோ மற்ற தலைவர்களோ யாரும் இத்தனை முறை அவரை சந்தித்து பேசியது இல்லை என்றும் கூறினார். பாஜகவை புரிந்து கொண்டும் அய்யாக்கண்ணு போட்டியிடுகிறார் என்றால், அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பேசினார்.

தமிழகத்தில் ஆட்சி கலையும் என ஸ்டாலின் இலவு காத்த கிளிபோல் காத்திருக்கிறார் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்தார். மேலும், பாஜக தேர்தல் அறிக்கை பூஜ்யம் அல்ல என்று தெரிவித்த அவர், பூஜ்யத்துக்குள் ராஜ்ஜியம் நடத்துவது மு.க.ஸ்டாலின் தான் எனவும் அந்த பூஜ்யத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால்தான் பாஜக சதம் அடித்திருப்பது தெரியும் என்றும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+