வீட்டில் ரகசிய கேமரா.. தம்பதியின் படுக்கை அறை காட்சிகள் வெளியீடு.. கன்னியாகுமரியில் பரபரப்பு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் வீட்டில் ரகசிய கேமரா வைத்து தம்பதியின் படுக்கை அறை காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட கும்பல் குறித்து எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
படுக்கை அறை காட்சிகளை ரகசிய கேமரா வைத்து படம் பிடித்து அதை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது ஒரு கும்பல். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. வீட்டிற்குள் அவர்களுக்கே தெரியாமல் சிறிய கேமராவை வைத்து இந்த மோசமான செயலை அரங்கேற்றி உள்ளனர்.

இதுபற்றி கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த தம்பதி புகார் அளித்துள்ளனர். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் அவர் கூறுகையில், " எங்களுக்கு 6 வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது. நாங்கள் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கிராமத்தில் வசிக்கிறோம். எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பம். எங்களது படுக்கை அறை காட்சி வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.
எப்படி படுக்கை அறை காட்சிகள் வெளியே வந்தது என்று வீடு முழுவதும் சோதனை செய்தோம். படுக்கை அறையின் மேல் பகுதியில் போடப்பட்டிருந்த இடைவெளியில் ஒரு சிறிய கேமரா இருந்ததை கண்டுபிடித்தோம். அந்த கேமராவை வைத்துதான் படம் பிடித்துள்ளார்கள்.

இதன்மூலம் மர்ம கும்பல் எங்கள் படுக்கை அறை காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பி உள்ளனர். இதுதொடர்பாக எங்களுக்கு சில நபர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இத்தகைய அநாகரிகமற்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட கும்பலை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அந்த வீடியோக்கள் மேலும் பரவாமல் தடுத்து அழிக்க வேண்டும்" இவ்வாறு அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த தம்பதிகளிடம் விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications