நாகர்கோவில் நேசமணி நகரில் என்னப்பா நடக்குது.. இப்படி ஒரு மசாஜா? ஆர்வமாக போன ஆண்கள்.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்களும், பெண்களும் வந்து சென்ற நிலையில், இதனை ரகசியமாக கண்காணித்த போலீசார், அதிரடியாக உள்ளே புகுந்து பார்த்த போது, அரை குறை ஆடையுடன் வாலிபர்கள் தப்பி ஓடினார்கள்.. அங்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

விபசாரம் என்பது பல்வேறு பகுதிகளில் ரகசிமயாக நடந்து வருகிறது. இதை யாராவது சொன்னாலோ, வித்திசமான நடவடிக்கைள் ஒரு சில இடங்களில் தெரிந்தாலோ போலீசார் கண்டுபிடித்துவிடுவார்கள்..இதனால் போலீசாருக்கு தெரியாதவகையில் பல்வேறு யுக்திகளை விபச்சார புரோக்கர்கள் கடைபிடிக்கிறார்கள்.. அப்படி அவர்கள் யுக்தியை கண்டுபிடித்து தொழிலை செய்தாலும், எப்படியாவது போலீசார் மோப்பம் பிடித்து கைது செய்வார்கள். அப்படியான சம்பவம் தான் நாகர்கோவிலில் நடந்துள்ளது.

Do you know what is happening in Nagercoil with teenage girls in massage centers?

நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் ஒரு மசாஜ் சென்டரில் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்களும், பெண்களும் வந்து சென்றுள்ளார்கள்.. என்னடா இது அடிக்கடி இப்படி ஆண்கள் பெண்கள் இங்கு வந்து போறாங்களே என சந்தேகமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேசமணி நகர் போலீசாருக்கு விபச்சாரம் நடந்து கொண்டிருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நாகர்கோவில் நேசமணி நகர் போலீசார் அந்த மசாஜ் சென்டரை ரகசியமாக கண்காணித்து வந்தார்கள். விபச்சாரம் நடப்பது உறுதியானதையடுத்து, வியாழக்கிழமை மதியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் அதிரடியாக அந்த மசாஜ் சென்டருக்குள் நுழைந்து சோதனையிட்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு அறையில் 32 வயதுடைய இளம்பெண் ஒருவர் அரை குறை ஆடையுடன் இருந்திருக்கிறார். அவருடன் 2 ஆண்ளும் அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளனர். போலீசாரை பார்த்ததும் அந்த இளைஞர்கள் , தப்பித்தால் போதும் என தாவி குதித்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை துரத்தி சென்றும் லாவகமாக தப்பினார்கள். இதையடுத்து அரைகுறை ஆடையுடன் இருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தார்கள்.

நேசமணி போலீசார், இளம்பெண்ணிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த இளம்பெண் உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவரை அம்மாண்டிவிளையை சேர்ந்த கீதா (34), வெள்ளமடத்தை சேர்ந்த சாந்தி (32) ஆகியோர் ஆசைவார்த்தை கூறி விபச்சாரத்தில் தள்ளியது தெரியவந்தது.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், கீதா, சாந்தி ஆகியோரை கைது செய்தார்கள். மேலும் தப்பி ஓடிய இரண்டு இளைஞர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இது ஒரு புறம் எனில், நாகர்கோவிலில் உள்ள இன்னொரு மசாஜ் சென்டரிலும் விபச்சாரம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளது..

நேசமணி நகரை போல், நாகர்கோவில் வடசேரியில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இறச்சகுளம் பகுதியை சேர்ந்த 37 வயது பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை மீட்டார்கள். மேலும் அவரை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பெண் புரோக்கர் இறச்சகுளத்தை சேர்ந்த நளினி (33) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றொரு பெண் புரோக்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். நாகர்கோவில் மசாஜ் சென்டர்களில் அடுத்தடுத்து விபச்சாரம் தொழில் செய்த புரோக்கர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+