ஓணம் வந்தல்லோ.. தோவாளைக்கு பூக்களும் வந்து குவிந்தல்லோ.. சூடு பிடிக்கும் விற்பனை!
Recommended Video
நாகர்கோவில்: கேரளாவில் ஓணப்பண்டிகை கொண்டாட்டங்கள் தொடர் பண்டிகைகள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை ஏற்றமடைய துவங்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கிவரும் தோவாளை பூ சந்தையில் பூக்களின் விலையானது ஏற்றம் அடைய துவங்கியுள்ளது. ஓசூர்,பெங்களூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை பகுதியில் உள்ள மலர் சந்தைக்கு பூக்கள் வருவது வழக்கம்.

இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பூக்களை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். அதேபோன்று தோவாளையில் இருந்தும் பூக்கள் பிற மாவட்டங்களுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூக்கள் விலையானது ஒரே நிலையில் இருந்த்து. இந்நிலையில் இன்று முதல் பூக்களின் விலை ஏற்றம் அடைய துவங்கியுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை அதேபோன்று விநாயகர்சதுர்த்தி மற்றும் திருமணம் போன்ற சுப முகூர்த்த தினங்கள் அடுத்தடுத்து வரும் நிலை காரணமாக பூக்களின் விலை ஏற்றம் அடைய துவங்கியுள்ளது.
170 ரூபாய்விற்பனையான ஆன பிச்சி 200 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்பனையான முல்லைப்பூ 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மல்லிப்பூ 175 ரூபாய் டூ 200 ரூபாய்க்கும் கனகாம்பரம் 300 ரூபாய், வாடாமல்லி 40 ரூபாய் அரளிப்பூ 100 ரூபாய் பட்டன் ரோஜா 100 ரூபாய் க்கும் விற்பனையாகிறது.
மேலும் இன்னும் சில நாட்களுக்கு பூக்கள் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
நாகர்கோவிலில் ஹெல்மெட் போடாமல் போனால்.. வீடு தேடி வரப்போகும் அபராதம்.. வந்தது ஏஐ கேமரா -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications