பஸ் ஸ்டாண்ட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 வயசு பெண் குழந்தை.. திடீரென மாயம்.. குமரியில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில்தூங்கிக் கொண்டிருந்த 3 வயசு பெண் குழந்தை.. திடீரென மாயம்.. வீடியோ

    நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தை திடீரெ மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சந்தைவிளை பகுதியை சேர்ந்த பாசி, ஊசி விற்கும் சடையன் - தேவி தம்பதியின் மகள் வீரம்மா (வயது 3). சடையானும், தேவியும் நாகர்கோவில் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர்.

    girl child goes missing in nagercoil bus stand

    நேற்று இரவு சடையன்- தேவி தம்பதியினர் தங்களின் மூன்று வயது மகள் வீரம்மாவுடன் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இரவு தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலையில் பார்த்த பொது மூன்று வயது குழந்தையை காணவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் என கருதி கோட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதனடிப்படையில் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவையும் பார்த்து வருகின்றனர்

    குழந்தை கடத்தப்பட்டதா?. என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்கத்தில் படுத்திருந்த குழந்தை காணாமல் போனது நாகர்கோவில் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+