நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இசக்கி அம்மன் கோவில் உண்டியலில் கை வைத்த ஆனந்த்.. கட்டி வைத்து உதைத்த மக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர் -வீடியோ

    நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலமாக கோவிகளில் உண்டியலை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    hundi theif captured in suseendiram

    இந்த நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள நைனா புதூரில் இசக்கி அம்மன் கோவிலில் நேற்றிரவு வாலிபர் ஒருவர் புகுந்து கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த நபர் ஒருவர் பார்த்து ஊர்மக்களிடம் தகவல் கொடுக்க, ஊர் மக்கள் திரண்டு வந்த அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.

    பின்னர் அவரை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அந்த நபரிடம் விசாரித்தனர். அதில் அவர் திருடன் எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சுசீந்திரம் போலீசார் அங்கு வந்து அந்த நபரிடம் விசாரணை செய்த போது அவரது பெயர் ஆனந்த் (22) என்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீஸார் அந்த நபரைக் கைது செய்து ஆட்டோவில் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது

    English summary
    People nabbed a Hundi thief near Suseendiram and handed over to Police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X