இது வேறயா? “பெண்ணை காதலிச்சேன்”.. போலீஸ் விசாரணையில் திரும்பதிரும்ப சொன்ன பாதிரியார் -அடுத்த பெண்ணா?
நாகர்கோவில்: தேவாலயத்துக்கு வந்த ஏராளமான பெண்களை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்து ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆண்டோ, ஒரு பெண்ணை தான் காதலித்து வந்ததாகவும், பாதிரியார் என்பதால் அவரை திருமணம் செய்யவில்லை எனவும் போலீஸ் விசாரணையில் தெரிவித்து இருக்கிறார்.
நாகர்கோயிலில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த பெனெடிக் ஆண்டோவை தாக்கிவிட்டு அவரது லேப்டாப்பை கடந்த மாதம் மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர். இந்த நிலையில் பாதிரியார் ஆண்டோவின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவற்றில் ஏராளமான பெண்களுடன் ஆண்டோ ஆபாசமாக
தனிமையில் இருக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

அந்த வீடியோக்களும் புகைப்படங்களுமே திருடப்பட்ட லேப்டாப்பில் இருந்தே சமூக வலைதளங்களில் கசியவிடப்பட்டதாக கூறப்படுகிறது. பாவ மன்னிப்பு கேட்டு தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் அன்போடு பேசி செல்போன் எண்களை பெற்ற பாதிரியார் பெனடிக் ஆண்டோ தொடர்ந்து அன்போடு பேசி அவர்களை வசப்படுத்தி இருக்கிறார். அதை தொடர்ந்து அவர்களிடம் வாட்ஸ் ஆப் மூலம் பேசத் தொடங்கிய பாதிரியார், நாட்கள் செல்ல செல்ல ஆபாசமாகவும் அந்தரங்கமாகவும் பேசி உள்ளார்.
அத்துடன் பெண்களிடம் வீடியோ கால் மூலமாக பேசிய பெனெடிக் ஆண்டோ, அவர்களுடன் நிர்வாணமாக நிற்கும் காட்சிகளை ஸ்க்ரீன் ரெக்கார்டு செய்து உள்ளார். இவர் இவ்வாறு பெரும்பாலும் பேசியது கல்லூரி மாணவிகள்தான் என்கிறார்கள். பேச்சில் மயங்கி சில பெண்களும் பாதிரியார் சொல்வதை கேட்டு இருக்கிறார்கள். அத்துடன் நேரிலும் பெண்களிடம் பாதிரியார் ஆண்டோ தவறாக நடந்துகொண்டதாகவும், ரகசியமாக பதிவு செய்த ஆபாச வீடியோக்களை காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனால் பெண்கள் பாதிரியாரிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் 18 வயதான நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் நாகர்கோயில் சைபர் கிரைம் காவல்துறை பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. அதை தொடர்ந்து தலைமறைவான பாதிரியாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாதிரியாரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று போலீசார் பாதிரியாரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் பாதிரியாரிடம் விசாரணையை தொடங்கினர். லேப்டாப்பில் இருந்த வீடியோக்கள் கசிந்தது தொடர்பாக ஏற்கனவே அவர் விளக்கமளித்து இருந்தார்.

அதேபோல், தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், பாதிரியாராக இருந்துகொண்டு எப்படி அவரை திருமணம் செய்ய முடியும் என கேட்டு, நண்பர்களாக பிரிந்துவிட்டோ என்று இருந்தார். தற்போதும் அதே தகவலையே அவர் விசாரணையில் சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு பெண்ணும் பாதிரியார் மீது பாலியல் புகாரை அளித்து உள்ளார். தொடர்ந்து விசாரணை செய்து வரும் போலீசார் மாலை பாதிரியாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். நர்சிங் மாணவியின் புகாரின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் திட்டமிட்டு உள்ளார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications