நாகர்கோவிலுக்கு ஒரு காசி.. மதுரைக்கு ஒரு ஸ்டீபன்.. மேடைக் கச்சேரியில் காதல் கச்சேரி.. மனைவி புகார்!
கன்னியாகுமரி: நாகர்கோவில் காசி பாணியில் வயது வித்தியாசமின்றி நிறைய பெண்களை காதல் வலையில் விழவைத்து நகைப் பணம் உள்ளிட்டவற்றை பறித்து வருவதாக தனது கணவரும் சைமன் இன்னிசைக் குழுவைச் சேர்ந்தவருமான ஸ்டீபன் மீது மனைவி புகார் அளித்துள்ளார்.
Recommended Video
நாகர்கோவில் காசியை நினைவிருக்கும். அவர் காதல் என்ற பெயரில் ஏராளமான பெண்களின் வாழ்க்கையை சூறையாடிவிட்டு தற்போது சிறையில் உள்ளார். அது போல் மதுரையிலும் ஒரு "காசி" இருக்கிறார்.
ஆம் , மதுரை சைமன் மேஸ்ட்ரோ இன்னிசைக் குழுவில் பாடகியாக இருந்தவர் கோபிகா. இவரும் அதே இசைக் குழுவின் முக்கிய இசைக் கலைஞராக உள்ள மைக் ஸ்டீபனும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

காதல் மனைவிக்கு பெண் குழந்தை
இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. கணவர் மைக் ஸ்டீபன் வயது வித்தியாசமின்றி சிக்கும் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து அவர்களது வாழ்க்கையை சீரழித்து வருவதாக கோபிகா திடுக் புகாரை தெரிவித்துள்ளார்.

மயங்கும் பெண்கள்
மேடை கச்சேரியில் ஸ்டீபனின் பெர்ஃபார்மன்ஸால் மயங்கும் பெண்களின் செல்போன் எண்களை வாங்கி கொள்கிறாராம். பின்னர் அவர்களிடம் பேசி யார் காதல் வலைக்கு சூட்டானவர் என்பதை பேசுவதில் இருந்து தெரிந்து கொண்டு அவர்களை தனது பேச்சாற்றலால் மயக்கும் ஸ்டீபன், தன்னை மறந்து தனிமையில் இருக்கும் பெண்களை வீடியோ எடுத்து புகைப்படமும் எடுக்கிறார்.

பெண்களின் ஆபாச வீடியோ
அந்த ஆபாச வீடியோ, புகைப்படத்தை காண்பித்து அந்த பெண்களை மிரட்டி மேலும் உறவு கொள்வது, பணம், நகை பறிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறாராம். சிறிதும் வயது வித்தியாசமின்றி பெண்களின் வாழ்க்கையை சூறையாடும் ஸ்டீபனிடம் எத்தனை முறை எடுத்துச் சொல்லியும் அவர் கேட்பதில்லை.

கொலை மிரட்டல்
மீறி இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக தன்னை மிரட்டுகிறார் என கூறும் கோபிகா, பல பெண்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெணத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆதாரத்துடன் புகார் அளித்த மனைவி
வெற்று புகாரை அளிக்காமல் தனது கணவர் மற்ற பெண்களுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் எஸ்பியிடம் ஒப்படைத்துள்ளார். ஸ்டீபனின் செயல்பாடுகளுக்கு அவரது தாய், தந்தையும் உடந்தையாக இருப்பதாக கோபிகா புகார் கூறுகிறார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications