வழிந்து நிறையும் ஆபாச லேப்டாப்.. சுற்றலில் விட்டது யார்.. நாகர்கோவில் காசியின் பகீர் பக்கங்கள்
நாகர்கோயில் காசியை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர்
நாகர்கோவில்: காசிக்கு 6 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது.. அதனால் காசியை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.. முன்னதாக, காசிக்கு மெடிக்கல் செக்கப் செய்து மீண்டும் ஜெயிலில் அடைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்! அதேபோல, காசி வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற எஸ்பி பரிந்துரை செய்துள்ளார்.
Recommended Video
26 வயது நாகர்கோவில் காசியின் வழக்கு திடீரென வேகம் எடுக்கிறது.. திடீரென மந்தமாகுவதாக பல்வேறு தரப்பினர் சொல்லி வருகின்றனர்.
நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்து, ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி, பணம் பறித்து தொழிலதிபராகவே ஆகிவிட்டார் நாகர்கோவில் காசி.. யார் யார் இவருக்கு பின்னணியில் இருக்கிறார்கள் என்று இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை

விசாரணை
ஏற்கனவே 3 நாள் போலீஸ் காவல் போடப்பட்டது.. திரும்பவும் 6 நாள் விசாரணை நடந்தது.. மொத்தமாக நடந்த இந்த 9 நாள் விசாரணயில் பெரிய அளவில் யார் பெயரையும் காசி சொல்லவில்லை என்றே தெரிகிறது. "தான் யாரையுமே ஏமாற்றவில்லை, அந்த பெண்களாகவே என் உடம்பை பார்த்து வலையில் விழுந்துவிட்டனர்" என்று சொன்னாரே தவிர, தன்னை இன்னமும் யோக்கியனாகவே காட்டி கொண்டு வருவது போல உள்ளது.

துபாய் நண்பன்
இதுவரைக்கும் 12 பெண்களின் பெயர், தன்னுடைய 19 வயது நண்பன் ஜினோவின் பெயரை தவிர வேறு யாரையுமே காசி சொல்லவில்லை.. இன்னொரு நண்பன் துபாயில் இருக்கிறார்.. நில ஆக்கிரமிப்பு, கந்து வட்டி புகார் பற்றியெல்லாம் விசாரணை இனிமேல் ஆரம்பமாகும் என்கிறார்கள்.

லேப்டாப்
இந்த நேரத்தில் இன்னொரு தகவல் கசிந்துள்ளது.. நிர்வாண வீடியோக்கள் நிரம்பிய காசியின் லேப்டாப் வக்கீல் ஒருவரிடம் சென்றிருக்கிறது.. பிறகு அவரிடம் இருந்து அவரது பெண் தோழிகளுக்கு சென்றதாம்.. போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே காசியின் லேப்டாப் சுற்றலில் விட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.. யார் அந்த வீடியோக்களை வெளியிட்டது, யார் அந்த காசி மிரட்டும் ஆடியோக்களை வெளியிட்டது என்பதுதான் புதிராக உள்ளது.

வீடியோக்கள்
காசி பயன்படுத்திய லேப்-டாப் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது... அந்த லேப்-டாப்பில் உள்ள போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஆய்வு செய்ய கோர்ட்டில் அனுமதியும் கேட்கப்பட்டுள்ளது. கோர்ட்டு அனுமதி அளித்தவுடன் லேப்-டாப்பை லேப்-க்கு அனுப்பி ஆய்வு நடத்தப்படும்... அதன்பிறகுதான் லேப்டாப்பை வைத்து விசாரணை தொடங்கப்படும் என்கிறார்கள்.

காவல்
காசிக்கு நிறைய விஐபிக்கள் தொடர்பு உள்ளதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்ட நிலையில், நாளடைவில் எந்த பெயருமே வெளியே வரவில்லை.. காசியை போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்... இதனிடையே, கந்துவட்டி, பண மோசடி வழக்குகளில் கைதாகியுள்ள நாகர்கோவில் காசி வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் பரிந்துரை செய்துள்ளார்.

திருப்பங்கள்
இந்த 6 நாள் விசாரணையில் போலீசாரிடம் முக்கிய தகவல்களை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அவர் கொடுத்த தகவலின் பேரில் அடுத்த கைது நடவடிக்கைகள் தொடரும், இனிமேல்தான் காசி விசாரணையில் திருப்பங்கள் காத்திருக்கிறது என்றும் போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications