பெற்ற தாயுடன் சேர்ந்து 15 வயசு சிறுமியை நாசமாக்கலாமா.. நாஞ்சில் முருகேசனிடம் நீதிபதி காட்டம்
நாகர்கோவில்: முதலில் அம்மா.. அப்பறம்தான் அவரது மகள் என 60 வயசு முருகேசனுக்கு புத்தி தடுமாறி உள்ளது.. 15 வயசு பிஞ்சை நாசம் செய்த இந்த அதிமுக பிரமுகரின் விவகாரத்தில் தினந்தோறும் பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் நீதிபதி காட்டமான கேள்விகளையும் முருகேசனிடம் இன்று எழுப்பி உள்ளார்.
நாகர்கோவில் அடுத்த கோட்டாரை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய காதலனுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார்.. அதனால் மகளை காணோம் என்று பெற்றோர் கோட்டார் போலீசில் புகார் தந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீசாரும் அவர்கள் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து விட்டனர். காணாமல் போன சிறுமியை போலீசார் கண்டுபிடித்ததுமே, புகார் தந்திருந்த பெற்றோரிடம் ஒப்படைக்கவில்லை.. மாறாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்று, அங்கு வைத்துதான் விசாரித்திருக்கிறார்கள். பெற்றோருடன் தன்னை அனுப்ப வேண்டாம் என்று சிறுமி கதறி அழுதாராம்.

முருகேசன்
காரணம், 2 வருஷத்துக்கு முன்பு அதாவது 2017-ல், பெற்ற மகளை முருகேசனிடம் கூட்டிக் கொண்டு போனாராம் பெற்ற தாய்.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் 2 வருஷமாக தன்னை பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் தந்திருந்தார். இதையடுத்து எஸ்கேப் ஆகி, ஒரு தோட்டத்துக்குள் ஒளிந்து கொண்டிருந்த முருகேசனை 5 தனிப்படைகள் வைத்து தேடி, இறுதியில் கைது செய்தனர்.

பலாத்காரம்
முருகேசன் தான் மட்டும் சிறுமியை சீரழிக்காமல், தன்னுடைய நண்பர்களுக்கும் விருந்தாக்கினாராம்... இதை கேட்டு அதிர்ந்த போலீசார், சிறுமியின் அம்மா, பால், அசோக்குமார், கார்த்திக் ஆகிய 4 பேர் அப்போதே கைது செய்தனர். இதன்பிறகு விசாரணை மும்முரமாக நடந்தது. நாஞ்சில் முருகேசனுக்கு அந்த சிறுமியின் அம்மாவுடனேயே கள்ள தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இளைஞர்
தான் நாசமாக போனதுடன், இல்லாமல் பெற்ற மகளையும் பணத்துக்காக கொண்டு வந்து 60 வயது நபரிடம் குழந்தையை விட்டு சென்றிருக்கிறார்.. இந்த பாலியல் கும்பலிடம் சிறுமி தவித்து சிக்கியிருக்கிறாள்.. அந்த பிடியில் இருந்து தப்ப முடியாமல் தவித்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். இவ்வளவும் சிறுமி வாக்குமூலமாக தந்தார். இதன்பிறகுதான் முருகேசனை கட்சியில் இருந்தே தூக்கியது தலைமை.

மதுரை கோர்ட்
இந்நிலையில், தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் நாஞ்சில் முருகேசன் மனு தாக்கல் செய்திருந்தார்.. அதில், "கடந்த 2017ம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிடும் நிலையில், அப்போதெல்லாம் என்மீது எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாட்சிகள்
இது ஜோடிக்கப்பட்ட வழக்காக உள்ளது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும்.. தனக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

ஜாமீன் மறுப்பு
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், நாஞ்சில் முருகேசனுக்கு ஜாமீன் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, "பொறுப்பான பதவியில் இருந்த ஒருவர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு, சிறுமியின் வாழ்க்கையை வீணடிக்கலாமா? பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்க்கையை அவரது தாயாருடன் சேர்ந்து உயர் பொறுப்பு வகித்த ஒருவர் சீரழித்ததை ஏற்க முடியாது" என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.. பின்னர் அந்த மனு மீதான விசாரணையை அக்.6ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications