நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் நவராத்திரி.. கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட சுவாமி விக்கிரகங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளாவில் நவராத்திரி.. கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட சுவாமி விக்கிரகங்கள்-வீடியோ

    நாகர்கோவில்: மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனையில் மன்னரின் உடை வாள் உடன் சாமி விக்கிரகங்கள் நாளை புறப்படும் நிகழ்சி நடைபெற உள்ளன.

    அதில் பங்கேற்பதற்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் தமிழக கேரளா இரு மாநில போலிசார் அணிவகுப்புடன் புறப்பட்டு சென்றது. பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்.

    swamy iodls taken to kerala for navarathiri festival

    மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பத்மநாபபுரம் அரண்மனை யிலிருந்து மன்னரின் உடை வாள் உடன் தேவாரகோட்டு சரஸ்வதி தேவி, குமார கோவில் முருகன் மற்றும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்கிரகங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்வது வழக்கம்.

    swamy iodls taken to kerala for navarathiri festival

    அதன் படி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனையில் மன்னரின் உடை வாள் உடன் சாமி விக்கிரகங்கள் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற உள்ளன. அதில் பங்கேற்பதற்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் தமிழக கேரளா இரு மாநில போலிசார் அணிவகுப்புடன் புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    swamy iodls taken to kerala for navarathiri festival

    அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோவில் சார்பாக திருக்கண் சார்த்தி வழிபாடு நடந்தது. பின்னர் நான்கு ரதவீதிகளிலும் அம்மன் சிலை உலா வந்தது. அம்மன் பல்லக்குடன் பலர் உடன் சென்றனர். அப்போது, பக்தர்கள் தங்களின் வீடுகளின் முன் விளக்கேற்றியும், திருக்கண்சாத்தியும், மலர் தூவியும் அம்மனை வழிபட்டு வழியனுப்பினர்.

    swamy iodls taken to kerala for navarathiri festival

    அம்மன் ஊர்வலத்தின் முன் பெண்கள் முத்துக்குடை ஏந்தியும், கையில் திருவிளக்கேற்றியும், சிவாச்சாரியார்கள் பாடல் பாடியும், சிலம்பாட்டம், சிறுவர்களின் நடனம் ஆகியவற்றுடன் அம்மன் சிலை ஊர்வலமாக புறப்பட்டது. தமிழக கேரளா இரு மாநில போலிசார் அணிவகுப்புடன் சுவாமி ஊர்வலம் புறப்பட்டு சென்றது. பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்.

    English summary
    Swamy Idods were taken to Kerala for Navarathiri fesitival there.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X