'மார்டன் சனாதனவாதி தெரியுமா?' அட்டாக் மோடில் திருமாவளவன்.. ஆளுநர் ரவி மீது சரமாரி தாக்கு

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது விசிக தலைவர் திருமாவளவன் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: "தற்கால சனாதனவாதிக்கு ஓர் அடையாளம்தான் நம்முடைய ஆளுநர் ஆர்.என்.ரவி" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி விமர்சித்துள்ளார்.

தோள் சீலைப் போராட்டத்தின் 200ஆம் ஆண்டு நிறைவுப் பொதுக்கூட்டம் நேற்று(மார்ச்.06) நாகர்கோவிலில் நடைபெற்றது. 1822ம் ஆண்டு தொடங்கி 1859ம் ஆண்டு வரை நடைபெற்ற இந்த போராட்டம் தென் தமிழகம் மற்றும் கேரள மாநில வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தின் நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் பல முக்கிய அரசியல் தலைவர் பங்கேற்றனர். இதில் பங்கேற்று சிறப்புரையாற்றியிருந்த திருமாவளவன் மேற்குறிப்பிட்ட கருத்தை கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "சனாதனத்தால் நம்முடைய மண் எவ்வாறு சிதைந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள இந்த தோள் சீலை போராட்டம் உதவும். மார்க்சிய சிந்தனைகளால் இந்தியா சிதைந்துவிட்டது என்று சொல்லுகிற ஆளுநரை நாம் பெற்றிருக்கிறோம்.

தோள் சீலை போராட்டம்

தோள் சீலை போராட்டம்

ஆபிரகாம் லிங்கனின் வரலாற்றை பேசுவது அடிமை புத்தி என்று சொல்கிற ஒரு பிற்போக்கு சிந்தனையாளரை நாம் ஆளுநராக பெற்றிருக்கிறோம். இந்த ஆளுநர் டார்வின் அறிவியலை பேசக்கூடாது என்று கூறும் ஒரு சிந்தனை குழப்பவாதியாக இருக்கிறார். இந்த ஆளுநர்தான் தற்கால சனாதனிக்கு ஒரு அடையாளம். சனாதனிகள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்க ஆசைப்பட்டால் நம்முடைய ஆளுநரை பார்த்தால் போதும். இவர்கள்தான் சனாதனத்தின் காவலராக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சனாதனம் எப்படி இருக்கும் என்பதை உணர்த்துகிற போராட்ட வரலாறுதான் 'தோள் சீலை' போராட்டம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலை போராட்டம் எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு ஆங்கிலேயர்களை விட மோசமான கருத்தியலை தாங்கிக்கொண்டு மண்ணின் மைந்தர்களான உழைக்கும் மக்களை சுரண்டிய, விலங்குகளை விட கேவலமாக நடத்திய ஆதிக்க வர்கத்திற்கு எதிரான போராட்டம் என்பதும் முக்கியமானதாகும். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் மட்டுமே விடுதலை போராட்டம் கிடையாது. இப்படியான சனாதன கருத்தியலை கொண்டிருப்பவர்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டமும் விடுதலை போராட்டம்தான். அந்த வகையில் தோள் சீலை போராட்டம் ஒரு விடுதலை போராட்டம்தான்.

 சனாதன எதிர்ப்பு போராட்டம்

சனாதன எதிர்ப்பு போராட்டம்

இதேபோன்ற போராட்டம் இந்தியா முழுவதும் நடந்திருக்கிறது. இந்த போராட்ட வரலாறு கிறிஸ்தவ மெஷினரிகளால் திருத்தி எழுதப்பட்ட வரலாறு என்று சனாதனவாதிகள் கூறுகின்றார்கள். இன்று டெல்லியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கருத்தியலும், அன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆட்சி நடத்தியவர்களின் கருத்தியலும் ஒன்றுதான். எனவேதான் இன்று மத்தியில் உள்ள ஆட்சியாளர்களை அடையாளம் காணுங்கள், அம்பலப்படுத்துங்கள் என்று குரல்கொடுக்கிறோம், போராடுகிறோம். இந்த போராட்டத்திற்கு தளபதியாக நின்று தலைமை தாங்குபவர்தான் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.

போராளிகள்

போராளிகள்

அதேபோல ஸ்ரீ நாராயண குருவின் வழிவந்த போராளிதான் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். தென்தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடுகளை, சனாதனத்தை உடைக்க பிறந்தவர்தான் முத்துக்குட்டி எனப்படும் அய்யா வைகுண்டர் சுவாமிகள். அதேபோல கேரளாவில் ஸ்ரீ நாராயண குருவை தொடர்ந்து வந்தவர்தான் அய்யன் காளி.அவ்வப்போது போராளிகள் தோன்றுகிறார்கள். அவர்கள் ஆன்மீக தளத்திலிருந்தோ அல்லது பெரியாரை போல சமூக தளத்திலிருந்தோ போராடி வந்துள்ளனர். அதனால்தான் நாம் தற்போது சுதந்திர காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கிறோம்" என தோள் சீலை போராட்டத்தின் வரலாறு மற்றும் சமூக நீதிக்காக போராடியவர்களின் வரலாற்றை விரிவாக பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+