ஓசூர் டூ நாகர்கோவில்.. 3 பெண்கள் பார்த்த தில்லாலங்கடி வேலை! கையும் களவுமா சிக்கி ஒரே அசிங்கமா போச்சு

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே ஓடும் பேருந்தில் முன்னாள் ஊராட்சி தலைவியிடம் பணம் திருடிய 3 பெண்களை பயணிகள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஓசூரில் இருந்து வந்த மூன்று பெண்களும் பல பயணிகளிடம் கை வரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் கருதுவதால் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில் அருகே திங்கள் சந்தை என்ற ஊர் உள்ளது. சிறிய நகரமான திங்கள் சந்தைக்கு அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் பல்வேறு தேவைகளுக்காகவும் வந்து செல்வது வழக்கம். இதனால் திங்கள் சந்தை நகரில் இருந்து சுற்று வட்டாரபகுதிகளுக்கு மினி பஸ்களும், அரசு டவுன் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

Nagercoil theft police

ஓசூரில் இருந்து வந்த 3 பெண்கள் கைது

இந்த நிலையில்தான், திங்கள்சந்தை அருகே உள்ள ஆத்திவிளை ஊராட்சி முன்னாள் தலைவி மரிய அகஸ்டினாள் (வயது68) என்பவர் திங்கள்சந்தையில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பேருந்தில் பயணம் செய்தார். இவர் சென்ற அரசு பேருந்து திங்கள்சந்தை ரவுண்டானா தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது, மரிய அகஸ்டீனாள் கைப்பையில் இருந்த ரூ.5,500 பணத்தை அருகில் இருந்த பெண் ஒருவர் நைசாக திருடினார்.

இந்த திருட்டு வேலைக்கு மேலும் பெண்கள் உடந்தையாக இருந்தனர். நல்ல நேரமாக, பணம் திருடப்படுவதை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியான அகஸ்டீனாள் பார்த்துவிட்டார். இதனால், உடனே சத்தம் போட்டார். இதையடுத்து பேருந்தை உடனடியாக டிரைவரும் நிறுத்தினார். இந்த கேப்பில் மூன்று பெண்களும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் பேருந்தில் இருந்த பயணிகள் எங்கே ஒட பாக்குறீங்க என கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து, மூன்று பெண்களையும் இரணியல் காவல் நிலையத்தில் பேருந்தில் இருந்தவர்கள் ஒப்படைத்தனர்.

பணத்தை திருடிய மூன்று பெண்களிடமும் போலீசார் நடத்திய விசாரணை பிடிபட்டவர்கள் ஓசூரை சேர்ந்த சங்கீதா (32), மல்லிகா(30), லட்சுமி (36) என்பது தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பெண்களையும் கைது செய்து அவர்கள் திருடிய பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட பெண்கள் வெகு தொலைவில் இ்ருந்து வந்திருப்பதால் பல இடங்களில் பேருந்தில் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

போலீசார் அறிவுரை

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பேருந்து, ரயில்களில் கூட்ட நெரிசல் சமயத்தை பயன்படுத்தி திருடும் கும்பல்கள் அடிக்கடி பிடிபடும் நிலையில், கூட்ட நெரிசலான இடங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், முன் பின் தெரியாதவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடக்கூடாது என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+