'அய்யோ அம்மா, விட்டு விடுங்க'.. சிறைக்குள் போக மறுத்து.. குழந்தை போல் கதறி அழுத இந்துசேனா பிரமுகர்!
நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் கல்லூரியில் விநாயகர் சதுர்த்திக்கு நிதி கேட்டு கலாட்டா செய்ததாக கைது செய்யப்பட்ட இந்து சேனா அமைப்பின் நிர்வாகி, சிறைக்கு செல்ல மறுத்து, அய்யோ, அம்மா விட்டுடுங்க என்று கதறி அழுதார். அவரை விடப்படியாக பிடித்து இழுத்து சென்று போலீசார் சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் தென்னிந்திய திருச்சபையின் நிர்வாகத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு அண்மையில் இந்து சேனா அமைப்பின் நிர்வாகிகள் என்று கூறிக்கொண்டு மூன்று பேர் வந்துள்ளனர்.

கல்லூரி நிர்வாக அலுவலகத்துக்குச் சென்ற அந்த மூன்று பேரும், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொடை வேண்டும் என கேட்டிருக்கிறார்கள். ஆனால் இதுபோல் பலர் நன்கொடை கேட்டு கல்லூரிக்கு அடிக்கடி வந்து செல்வதால், நன்கொடை வழங்க கல்லூரி நிர்வாகத்தினர் மறுத்தார்களாம். மேற்கு மாவட்டத்தில் இருந்து வந்து இங்கு நன்கொடை கேட்கிறீர்கள். கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை வரச் சொல்லுங்கள் என்று அங்கிருந்த கல்லூரி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்
அப்போது இந்து சேனா அமைப்பின் நிர்வாகிகள் கல்லூரியில் கலாட்டா செய்ததாக கூறப்படுகிறது. எங்களுக்கு பணமில்லையா, முதலில் நீ என பேசாதீங்க, 'ஜி' என சொல்லுங்கள் என மிரட்டும் தொனியில் கேட்டதுடன், எங்களுக்கு பணம் இல்லை என்று சொல்வீர்களா என்று தகராறு செய்தார்களாம். இதையடுத்து அங்கிருந்த நிர்வாகிகள் இந்து சேனாவைச் சேர்ந்த 3 பேரையும் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்து சேனா அமைப்பினர் தொடர்ந்து வற்புறுத்தியும் கல்லூரி நிர்வாகத்தினர் நன்கொடை வழங்க மறுத்ததால் கத்திப் பேசியவாறே மூவரும் காரில் ஏறி அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். இவர்கள் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நன்கொடை கேட்டு மிரட்டுவதாக, இந்து சேனா அமைப்பினர் மீது கல்லூரி முதல்வர் சுசீலா, வடசேரி போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்பேரில், இந்துசேனா தலைவரான குழித்துறை பெருந்தெருவை சேர்ந்த பிரதீப்குமார் என்ற மணிகண்டன் மீதும் (40), சிதறால் துண்டத்துவிளையை சேர்ந்த பிரதீஷ் (36) மீதும் , பாகோடு கழுவன்திட்டை கொட்டாரக்கரைவீட்டைச் சேர்ந்த மூர்த்தி (50) மீதும் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பிரதீஷை வடசேரி போலீஸார் வெள்ளிக்கிஐம கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நிலையில், அவரை 14 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டது. இதையடுத்து பிரதீஷை நாகர்கோவில் சப் ஜெயிலில் அடைக்க கொண்டு சென்றார்கள்.
போலீஸார் பிரதீஷை வண்டியில் ஏற்றி சென்று சிறைச்சாலை அருகே கொண்டு சென்று இறக்கிவிட்டனர். அங்கு சிறைக்குள் போக அழைத்து சென்ற போது, திடீரென பிரதீஷ், சிறைச்சாலை முன்பு அமர்ந்து சிறைக்குள் வரமாட்டேன் என்று அழுது அடம்பிடித்துள்ளார்.
அப்போது போலீஸார் அவரிடம் பேசி புரிய வைத்து உள்ளே அழைத்து செல்ல முயன்றனர்.. ஆனாலும், அவர் சிறைக்குள் செல்லாமல் 'அய்யோ அம்மா, என்னை விட்டு விடுங்கள்' என்று சிறு பிள்ளை போல் கதறி அழுது கூச்சலிட்டார்.
இதனால் சப் ஜெயில் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவரை விடாப்பிடியாக உள்ளே அழைத்து சென்ற போலீசார், சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பாகோடு கழுவன்திட்டை கொட்டாரக்கரைவீட்டைச் சேர்ந்த மூர்த்தி , குழித்துறை பெருந்தெருவை சேர்ந்த பிரதீப்குமார் என்ற மணிகண்டன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications