மொட்டை மாடியில் ஆணுறைகள்.. பங்களாவில் "விருந்து".. ஜாயின்ட் கலாச்சார சீரழிவில் மாணவிகள்.. நம்ம ஊர்லயா
பங்களாவின் மொட்டை மாடியில் போதைவிருந்து நடந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது
நாகர்கோவில்: 'என்னை மட்டும் நீ எப்பவுமே நம்பாதே.. வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழுடா.. என்னை மாதிரி நீயும் வாழ்க்கையை என்ஜாய் பண்ண பழகிக்கோ என்ற காதலியின் வார்த்தையை கேட்டு, தலையே சுற்றிப்போய்விட்டது அந்த இளைஞனுக்கு.. காரணம், 6 வருடமாக உருகி உருகி அந்த பெண்ணை காதலித்தவர்.
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ளது சுல்தான் கடை பகுதி.. இங்கு வசித்து வந்த மாணவர் பெயர் விக்ரம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 18 வயதுகூட இன்னும் இவருக்கு முடியவில்லை.
குளச்சல் பகுதியை சேர்ந்த மாணவி ரம்யா.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. இவர்கள் 2 பேருமே ஒன்றாக ஸ்கூலில் படித்தவர்கள்.. அப்போதிருந்தே இருவருமே காதலித்து வந்துள்ளனர்..

பைக் நண்பர்கள்
ஸ்கூல் முடிந்து காலேஜ் சென்ற நிலையிலும் இந்த காதல் தொடர்ந்தது.. 6 வருடமாகவே, இவர்கள் 2 பேரும் பைக்கில் பல இடங்களுக்கு சுற்றி வந்து காதலை வளர்த்துள்ளனர்.. ஆனால் ஸ்கூலில் பார்த்த ரம்யாவுக்கும், காலேஜ் சென்ற ரம்யாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் தென்பட்டது.. ஆளே அடியோடு மாறிவிட்டார். நிறைய ஆண் நண்பர்கள் பழக்கமானார்கள்.. அவர்களுடன் பைக்கில் ஊர் சுற்றி வந்துள்ளார்.. ஆண் நண்பர்கள் ஒவ்வொருவருடனும் பைக்கில் சுற்றி வந்துள்ளார்..

ஆண் நண்பர்கள்
அவர்களின் தோளில் சாய்ந்து கொண்டு, ஜாலியாக திரிவதை பார்த்து, அதிர்ந்து போன விக்ரம், ரம்யாவை கண்டித்துள்ளார்.. இதற்கு நடுவில் எத்தனையோ பேர் ரம்யாவை பற்றி, விக்ரம் காதில் தவறான செய்திகளை சொன்னார்கள்.. ஆனால், ரம்யா மீதிருந்த காதலாலும், நம்பிக்கையாலும், எதையும் விக்ரம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதேசமயம், நண்பர்களுடன் சுற்றுவதையும் ரம்யா நிறுத்தவில்லை. ஒருநாள் பொறுமையிழந்த விக்ரம், ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்? என்று ரம்யாவிடம் சத்தம் போட்டுள்ளார்.

ஜாலி + என்ஜாய்
அதற்கு ரம்யா, "வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழுடா.. என்னை மட்டுமே எப்பவுமே நம்பாதே.. என்னைப் போல் நீயும் என்ஜாய் பண்ண பழகிக்கோ.. நான் இப்படித்தான் இருப்பேன்.. உனக்கு பிடிச்சால் என்னுடன் பழகு.. இல்லாவிட்டால் உன் இஷ்டம்" என்பது போல சொல்லி இருக்கிறார்.. இதை கேட்டு நொறுங்கிப்போன விக்ரம், ரம்யாவை எப்படி திருத்துவது என்று குழம்பி தவித்தார்.

சரக்கு பார்ட்டி + ஜாயின்ட்
இந்த நேரத்தில்தான், குளச்சல் பகுதியில் ஒரு பங்களாவில், தோழிகளுடன் பிறந்தநாள் விழாவை ரம்யா கொண்டாடுவதாக தகவல் கிடைத்தது.. உடனே அந்த பங்களாவுக்கு பைக்கில் பறந்தார் விக்ரம்.. அந்த பங்களாவின் மொட்டை மாடியில்தான் பார்ட்டி நடந்து கொண்டிருந்தது.. அவை அனைத்தையும் கண்ணால் பார்த்ததும், வாழ்க்கையின் உச்சக்கட்டத்துக்கே சென்றுவிட்டார்.. அங்கே 4, 5 தோழிகளுடன் ஆண் நண்பர்களும் வந்திருந்தனர். எல்லோரும் அரைகுறை டிரஸ்களுடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர். அனைவருக்கும் போதை தலைக்கேறி இருந்தது..

மொட்டை மாடி
அதைப் பார்த்து கோபத்தின் உச்சிக்கு சென்ற விக்ரம், அங்கிருந்த ஆண்களை அடித்து விரட்டினார்.. ரம்யாவின் கன்னத்தில் பளார் என 2 அறை விட்டார்.. அதற்கு பிறகு, அனைவரும் தெறித்து ஓடிவிட்டார்கள்.. இந்த சம்பவம் நடந்து மறுநாள் மகளின், கன்னம் வீங்கிப்போய், சிவப்பு கலரில் இருந்ததை கண்டு பெற்றோர் விசாரித்துள்ளனர்.. அப்போதுதான், பிறந்தநாள் விழா கொண்டாடியது, விக்ரமுக்கு பிடிக்கவில்லை, கன்னத்தில் அறைந்துவிட்டதாகவும் கூறி உள்ளார்.. காயங்கள் கடுமையாக இருந்ததால் பெற்றோர் ரம்யாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, குளச்சல் போலீசிலும் இது தொடர்பாக புகார் செய்துள்ளனர்.

பங்களா?
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.. சம்பந்தப்பட்ட பங்களாவுக்கு சென்றுள்ளார்கள்.,. அந்த பங்களாவில் யாருமே வசிப்பதில்லையாம்.. ஆட்கள் வசிக்காத பங்களாவில், ஏன் பிறந்தநாள் விழா கொண்டாடவேண்டும்? என்ற சந்தேகம் போலீசாருக்கு வந்துள்ளது.. பிறகு, அந்த வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்கள். அதை பார்த்து போலீசாரே மிரண்டுவிட்டனர்.. கிழித்து வீசப்பட்ட டிரஸ்கள், சிகரெட் துண்டுகள், மது பாட்டில்கள், ஸ்நேக்ஸ், ஆணுறைகள், என சிதறிக்கிடந்துள்ளது..

"கான்செப்ட்
அப்போதுதான், அது பர்த்டே பார்ட்டி இல்லை, மதுவிருந்து என்றும், பாலியல் சம்பவங்கள் அரங்கேறியிருந்ததும் தெரியவந்தது.. இதனால் போலீசார் பதறிப்போய் விசாரணையை தீவிரப்படுத்தினர்.. அப்போது பார்ட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு "கான்செப்ட் + சரக்கு பார்ட்டி + ஜாயின்ட்" என்ற யாரும் கண்டுபிடிக்காத சங்கேத வார்த்தைகள் அனுப்பப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.. இதற்கு அர்த்தம் என்ன என்று போலீசாருக்கே புரியவில்லையாம்.. " சரக்கு பார்ட்டி நடக்கிறது, கலந்து கொள்ளுங்கள்" என்பதாம்..

பாய் ஃபிரண்ட்ஸ்
மது விருந்து, டான்ஸ், முடிந்ததும், தங்கள் ஆண் நண்பர்களுக்கு பெண் தோழிகள் படுக்கை விருந்து வைப்பார்களாம். இப்படி பலமுறை நடந்தும் உள்ளதாம்.. இதெல்லாம் கேள்விப்பட்ட போலீசார், இந்த விருந்தில் கலந்து கொண்டவர்கள் யார் என்று அறிய முயன்றுள்ளனர்.. எல்லாருமே படிக்கிற பிள்ளைகள் என்பதால், ரகசிய விசாரணை நடத்தி, அவரவர் பெற்றோர்களிடமும் விஷயத்தை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்களாம். ஆனால், அதற்குள் போலீஸார் மோப்பம் பிடித்துவிட்ட, இந்த விஷயம் ஒரு மாணவிகளுக்கு தெரிந்து, கதிகலங்கி போயுள்ளனர்..

மோப்பம்
இதனிடையே, பார்ட்டியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு மறுபடியும் அந்த சங்கேத மொழி மெசேஜ்கள் வருகிறதாம்.. விருந்துக்கு வரச்சொல்லி 'மெசேஜ்' வருவதால், கலங்கி போய் உள்ளனர்.. மெசேஜ் கிடைக்கப்பெற்ற தோழிகள், ஒருவருக்கொருவர் போனில் பேசியுள்ளனர்.. போலீஸ் இந்த விஷயத்தில் இறங்கி மோப்பம் பிடித்துவிட்டதாக கலக்கத்துடன் பேசியிருக்கிறார்கள்.. இந்த ஆடியோ போலீசில் சிக்கி, சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடமும் போட்டுக்காட்டப்பட்டுள்ளது.. அதைக்கேட்டு அதற்கு மேல் இடிந்து போயுள்ளனர் பெற்றோர்கள்.. தொடர் விசாரணைகள் இது தொடர்பாக நடந்து கொண்டிருக்கிறது..

நெருப்பு
இப்படிப்பட்ட பார்ட்டிகள் வேறு எங்கெங்கு நடந்துள்ளன? இதன் நெட்வொர்க் என்ன? எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.. குளச்சலில் நடந்த இந்த சம்பவம் வெளியாகி மிகுந்த அதிர்ச்சியை அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுத்தி வருகிறது.. பெண் குழந்தைகளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று பெற்றோர்கள் தினம் தினம், வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருந்தால்.. இப்படியெல்லாம் நடப்பதை என்னவென்று சொல்வது? யார் காரணம்? பெற்றோர்களா? ஆசிரியர்களா? சோஷியல் மீடியாவா? அல்லது எல்லாருமா? தெரியவில்லை.. இளைய சமுதாயம் எங்கேதான் போய்க் கொண்டிருக்கிறது என்பதும் புரியவில்லை.

மெசேஜ்
இதில் இன்னொரு சிக்கலும் எழுந்துள்ளதாம்.. வாட்ஸ்அப்பிற்கு விருந்தில் கலந்து கொள்ளும்படி மெசேஜ்கள் வந்து கொண்டே இருக்கும் நிலையில், சில பெண்கள் பயந்து போயுள்ளனராம்.. காரணம், அந்த மொட்டை மாடி விருந்தில் கலந்து கொண்டதுதான் இவர்களின் முதல் பார்ட்டியாம்.. "என்ன நடக்கும் என்பதே தெரியாமல், நாங்கள் அங்கு போய் சிக்கிக் கொண்டோம்.. அதற்கு பிறகு வேறு எங்கும் செல்லவில்லை.. இந்த விஷயம் எங்கள் வீடுகளில் தெரிந்தால், தொலைத்து விடுவார்கள், மெசேஜ் வருவதை எப்படி யாரிடம் சொல்லி நிறுத்துவது என்று குழம்பி போயுள்ளனராம்

தோழிகள்
முதல்முறையாக அந்த விருந்தில் கலந்து, மானத்தை பறி கொடுத்தவர்களில் ஒருவர் சகதோழிக்கு போனில் பேசி இருக்கிறார்... அப்போது விருந்தில் நடக்கும் அலங்கோலங்களை சொல்லி, "நானும் ஒருமுறை அந்த விருந்தில் பங்கேற்று என்னையும் இழந்து தப்பு செய்து விட்டேன்... இனி மேலும் அந்த தப்பை செய்ய மாட்டேன். ஆனால் தொடர்ந்து விருந்துக்கு வரச் சொல்லி 'மெசேஜ்' அனுப்புகிறார்களே" என்று கதறி அழுதுள்ளார்.. இவை அனைத்துமே போலீஸாரின் கவனத்துக்கும் சென்றுள்ளதாம்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications