இரு ஆண் நண்பர்களின் கசமுசா உறவு.. ஒருவருக்கு திருமணம்.. மனம் உடைந்த இன்னொருவர் தற்கொலை
ஓரின சேர்க்கை விவகாரத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. ஓரினச் சேர்க்கை நண்பர்கள் இருவரில் ஒருவருக்குத் திருமணம் ஆனதால் மனம் உடைந்த இன்னொரு நண்பர் தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் சூரப்பள்ளம் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மகேஷ் ஒரு டிப்ளமோ என்ஜீனியர். அவருடைய நெருங்கிய நண்பர்தான் மணிகண்டன். இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள்.. கூடவே.. படுக்கையையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இருவருக்கும் ஓசூரில் நல்ல வேலையும் கிடைத்தது. ஆனால் அதை விட்டு விட்டு ஊர் திரும்பினர். ஒருவர் கொத்தனார் வேலை பார்க்க இன்னொருவர் எலக்ட்ரீஷியன் ஆனார். இருவருக்கும் இடையிலான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது. பிரிக்க முடியாத உறவாக அது மலர்ந்தது.
நேரில் பார்க்கும் நேரம் போக மற்ற நேரங்களில் எப்போது பார்த்தாலும் போனில் பேசிக் கொண்டிருப்பார்கள். வாட்ஸ் ஆப்பில் பேசுவார்கள். இருவரின் நெருக்கமும் கணவன் மனைவியின் நெருக்கமாக மாறியது இந்த நிலையில் மகேஷுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. பெண்ணையும் பேசி முடித்தே விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்தார் மணிகண்டன்.
என்னை விட்டுப் போக முடிவு பண்ணிட்டியா என்று மகேஷுடன் சண்டை பிடித்துள்ளார். ஆனால் மகேஷ் கேட்கவில்லை போல. அத்தோடு மணிகண்டனுடன் பேசுவதையும் குறைத்து விட்டார். இதனால் மனம் உடைந்து போனார் மணிகண்டன். தான் உயிருக்கு உயிராக பழகிய மகேஷ் தன்னை ஒதுக்கியதை தாங்க முடியாத அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் ராஜாக்கமங்கலம் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டனின் செல்போனில், மகேஷுடன் அவர் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications