ரூ 10 ஆயிரம் கடன்.. மனைவியை அசிங்கமாக பேசிய கந்து வட்டிக்காரர்கள்.. மனஉளைச்சலால் மாண்ட தொழிலாளி
நாமக்கல்: வெறும் ரூ 10 ஆயிரம் கந்து வட்டி கடனுக்காக வீட்டு வாசலில் நின்று மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த விசை தறித் தொழிலாளி குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதில் அவரும் மனைவியும் இறந்த நிலையில் இரு குழந்தைகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
Recommended Video
திருச்செங்கோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி (40). தறித்தொழிலாளியான இவரது மனைவி மேனகா (38). இவர்களுக்கு பூஜா (14), நவீன் ஆகிய குழந்தைகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கிற்கு முன்னர் கந்து வட்டி கும்பலிடம் ரூ 10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு
அதற்கு அவ்வப்போது வட்டி கட்டி வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் வட்டி கட்ட முடியாமல் தவித்தனர். இதனால் கந்து வட்டிக்காரர்கள் அசலையும் வட்டியையும் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் தனது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசியதை சுப்பிரமணியனால் ஜீரணிக்க முடியவில்லை.

டார்ச்சர்
இதனால் அவர் மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்தார். இதில் கணவனும் மனைவியும் பலியாகிவிட்டனர். இரு குழந்தைகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து அவரது பெண் பூஜா கூறுகையில் வேலை இல்லை என்பது தெரிந்தும் அம்மாவையும் அப்பாவையும் கடனை திருப்பிக் கேட்டு அய்யாசாமி, வைரவேல் ஆகிய இருவரும் டார்ச்சர் செய்தார்கள்.

பணம் கேட்டு நச்சரிப்பு
அம்மாகிட்ட ஒரு மாதிரியும் அப்பாகிட்ட ஒரு மாதிரியும் அய்யாசாமி பேசினார். போன் செய்தும் டார்ச்சர் செய்தனர். காலையில் எழுந்து பார்க்கும் போது அம்மாவும் அப்பாவும் இறந்து கிடந்தார்கள் என்றார் பூஜா. இதுகுறித்து மேனகாவின் தாய் கூறுகையில் இரவு 10 மணிக்கு என்னுடன் என் மகள் பேசினாள்.

ஜாதி ஜனம்
அப்போது ஏதாவது சொல்லியிருந்தால் நான் பணத்திற்கு ஏற்பாடு செய்திருப்பேனே. இரண்டு பேரும் அப்படியே தூங்கற மாதிரி இருக்காங்களே, இத்தனை ஜாதி, ஜனம் இருந்தும் என் பிள்ளைகளை நான் விட்டுவிட்டேனே என அவர் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications