தங்கச்சியை கட்டிக்க சொன்னான்.. முடியாதுன்னேன்.. கேட்கலை.. போட்டு தள்ளிட்டேன்.. ஷாக் தந்த விக்னேஷ்!
19 வயது நண்பனை கொன்ற 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்
நாமக்கல்: "தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க சொல்லி ரொம்ப தொந்தரவு... அதனால்தான் ஒரு கொலையே செய்ய வேண்டியதா போச்சு" என்று போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார் இளைஞர் ஒருவர்!
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் எலந்தகுட்டை அருகே நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்தது.. அவரது உடம்பில் பல இடங்கள் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது.. இறந்தவர் பெயர் விக்னேஷ் என்றும், வயது 19 என்றும் பள்ளிப்பாளைய்ம் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

லேத் பட்டறை ஒன்றில் விக்னேஷ் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால், இவரை யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள் என்று தெரியாமல் அதற்கான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர்.
இதையடுத்து இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.. அவர் பெயரும் விக்னேஷ்.. வயது 25 ஆகிறது.. 19 வயது இளைஞரை எதற்காக இவ்வளவு கொடூரமாக கொலை செய்தார் என்பது குறித்து வாக்குமூலம் தந்துள்ளார்.
"நானும் விக்னேஷும் நல்ல ஃபிரண்ட்ஸ்.. இவருக்கு ஒரு தங்கச்சி இருக்கிறார்... பட்டறையில் வேலை பார்த்து வந்த விக்னேஷ், அவனுடைய தங்கச்சியை கல்யாணம் செய்துக்க சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்.. எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல.
நான் எத்தனையோ முறை வேணாம்னு சொல்லியும், தங்கச்சியை கல்யாணம் செய்து வற்புறுத்திக்கிட்டே இருந்தான்.. சம்பவத்தன்றும் இதேபோலதான் தகராறு வந்தது.. ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த நான், விக்னேஷை கத்தியால் குத்தி கொன்றுவிட்டேன்" என்றார். இதையடுத்து கொலையாளி விக்னேஷை போலீசார் சேலம் ஜெயிலில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications