இவ்வளவு மெத்தனமா.. அசால்டாக கார் கதவை திறந்த பெண் மருத்துவர்.. அநியாயமாக பறிபோன உயிர்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: பின்னால் யாராவது வருகிறார்களா என்பதை கவனிக்காமல் நாம் செய்யும் சிறு தவறு உயிரையே பறித்து விடுகிறது. அப்படித்தான் நாமக்கல் அருகே பின்னால் இருசக்கர வாகனத்தில் ஒருவர் வருவது தெரியாமல் மருத்துவர் ஒருவர் கார் கதவை திறந்தார். இதனால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பரிதாபமாக இறந்து போனார்.

யாரோ ஒருவர் செய்யும் சிறு தவறு, கவனக்குறைவு, அலட்சியம் சாலைகளில் மிகப்பெரிய விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறது. பெரும்பாலான விபத்துகளுக்கு போக்குவரத்து விதிமீறல்களே காரணமாக இருக்கின்றன. சில நேரங்களில் சாலைகளும், சாலைகளில் வைக்கப்படும் வேகத்தடுப்புகள், வேகத்தடைகளும் விபத்துகளுக்கு காரணமாக இருக்கின்றன.

A young man dies when a doctor opens car door suddenly in Namakkal

நகர்ப்புறங்களில் வாகன நெருக்கம் அதிக அளவில் இருக்கும். அங்கு வாகனத்தை சாலையோரம் நிறுத்துவது பெரிய விபத்துகளுக்கு காரணமாக முடிகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில், மக்கள் அதிகம் வாகனங்களில் செல்லும் பகுதிகளில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதும், திடீரென சைடு பார்க்காமல் வாகனத்தை அப்படியே எடுத்து செல்வதும் விபத்துக்கு காரணமாக இருக்கிறது.

பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் சைடு பார்க்காமல் வாகனத்தை திருப்பித்தான் விபத்தில் சிக்குகிறார்கள். இதேபோல் லாரி ஓட்டுநர்களும் சைடு பார்க்காமல் முந்தி செல்வதால் தான் விபத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்குகிறார்கள். இதேபோல் வளைவுகளில் ஹாரன் அடிக்காமல் அசுர வேகத்தில் வாகனத்தை திருப்புவதும் விபத்திற்கு காரணமாக உள்ளது.

இதில் இன்னொரு மோசமான விஷயம் இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதியில் கார்களை சாலையோரம் நிறுத்துவது எந்த அளவிற்கு ஆபத்தானதோ, அதை விட ஆபத்தானது சைடுபார்க்காமல் வாகனத்தின் கதவை திறப்பது. அப்படி கதவை திறந்த காரணத்தால் நாமக்கல்லில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்

நாமக்கல் நகரில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி மருத்துவர் சித்ரா என்பவர் காரில் சென்றுள்ளார். காரை சாலையோரம் நிறுத்தி உள்ளார். அப்போது பின்னால் இருசக்கர வாகனம் வருவதை கவனிக்காமல் கார் கதவை மருத்துவர் சித்ரா திறந்தார்.

இதனால் அந்த நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சரவணன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.. இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+