நாமக்கல் நடிகர் குமாரராஜன் தற்கொலை செய்து கொள்ளவில்லை.. குடும்பத்தினர் தகவல்!
நாமக்கல்: நடிகர் குமாரராஜன் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என அவரது குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர்.
நாமக்கல்லில் இருக்கும் கங்கா நகரைச் சேர்ந்தவர் குமாரராஜன் (39). சந்திப்போம் சிந்திப்போம் என்ற படத்தில் துணை நடிகராக நடித்தவர் குமாரராஜன்.
இவர் தனது குடும்பத்தினருடன் நாமக்கல்லில் வசித்து வந்தார். தன் வேலை தான் நினைத்தபடி இல்லையே என்ற கவலை அவருக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.

வீட்டில் தற்கொலை
இதனால் அவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. மது விவகாரம் தொடர்பாக குமாரராஜனுக்கும் அவரது மனைவி சிந்துஜாவுக்கும் (35) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தகவல் வெளியானது.

குடும்பத்தினர்
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர். அதில் குமாரராஜன் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர் மாரடைப்பால் மட்டுமே இறந்தார். உண்மை நிலை தெரியாமல் பேச வேண்டாம் என குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

கொட்டாச்சி
பாலு ஆனந்த், கஞ்சா கருப்பு, கொட்டாச்சி, கிங்காங் ஆகியோருடன் சந்திப்போம் சிந்திப்போம் படத்தில் காமெடியில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் குமாரராஜன். இதையடுத்து துப்பார்க்கு துப்பாய, ரெண்டுல ஒண்ணு ஆகிய படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமானார்.

கண்ணீர் மல்க
இந்த நிலையில் குமாரராஜன் இறந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறந்த காமெடி நடிகரையும், தயாரிப்பாளரையும் திரையுலகம் இழந்துவிட்டதாக அவருடன் நடித்தவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications