அமீர் விவகாரம் பெரிசா வெடிக்குதே! 'மதுரை' கேங்கை 'ஓநாய்கள்' என விமர்சித்து சூர்யா ரசிகர்கள் போஸ்டர்
நாமக்கல்: இயக்குநர் அமீர் விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இயக்குநர், நடிகர்கள் சசிகுமார், சமுத்திரகனி, கரு.பழனியப்பன் உள்ளிட்டோரை ஓநாய்கள் என விமர்சித்து நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்றத்தின் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பிரச்சனையை விஸ்வரூபமாக்கி இருக்கிறது.
திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குநர் அமீர் குறித்து தகாத வார்த்தைகளை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இது திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அமீரை இழிவாக விமர்சித்த ஞானவேல் ராஜாவுக்கு பாரதிராஜா, சசிகுமார், சமுத்திரகனி, சினேகன், பொன்வண்ணன், கரு.பழனியப்பன், சேரன், நந்தா பெரியசாமி என பெரும் படையே திரண்டு நின்று கண்டனம் தெரிவித்தது.

அத்துடன் மதுரை பாஷை குறித்து ஞானவேல் ராஜா பேசியதும் மதுரை Vs மேற்கு மாவட்டம் என்ற பஞ்சாயத்தையும் கிளப்பிவிட்டது. இந்த பஞ்சாயத்தில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி கனத்த மவுனம் காப்பதும் பெரும் விமர்சனத்துக்குள்ளாக்கி வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவிப்பதாக கூறி ஒரு அறிக்கை வெளியிட்டார். ஆனால் ஞானவேல் ராஜாவின் இந்த 'வருத்தம்' அறிக்கை புதிய பிரச்சனையை கிளப்பிவிட்டது. அமீர் குறித்த விமர்சனங்களுக்கு பொதுவெளியில் மன்னிப்பு கேட்பதுடன் பேட்டி கொடுத்த வீடியோவை முற்றாக சமூக வலைதளங்களில் நீக்க வேண்டும் என சமுத்திர கனி, சசிகுமார் உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர். அதேபோல சிவக்குமார் குடும்பத்தினரின் மவுனம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர்கள் பெயரில் நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் இடம்பெற்ற வாசகங்கள்: நன்றி கெட்ட துரோகி இயக்குனர் அமீரையும் அமீரின் அல்லக்கைகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். கருங்காலி பழனியப்பனுக்கு நாவடக்கம் தேவை; சிங்கம் அமைதியாக இருப்பதால் ஓநாய்கள் ஊளையிடுவதா? - சூர்யா நற்பணி இயக்கம், நாமக்கல் கிழக்கு மாவட்டம்.
இப்படியான போஸ்டர் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. ஆனால் இந்த சுவரொட்டியின் உண்மை தன்மை உறுதி செய்யப்படவில்லை. நடிகர் சூர்யா ரசிகர்கள்தான் இந்த சுவரொட்டியை ஒட்டினார்களா என்பதும் உறுதியாக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications