சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகர்.. வீட்டிற்கு நேரடியாகச் சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா!
நாமக்கல்: சாலை விபத்தில் உயிரிழந்த தனது ரசிகர் மன்ற செயலாளரின் குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா ஆறுதல் கூறினார்.
நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (25). இவருக்குத் திருமணம் ஆகி 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில், இவர் கடந்த 21ஆம் தேதி நாமக்கல் துறையூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நாமக்கல் காவல் நிலையம் அருகே சாலையின் வளைவில் திரும்பும் போது, எதிர்பாராத விதமாக லாரி ஒன்று இவர் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகதீஷ்சை சிகிச்சைக்காகச் சேலத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், எதிர்பாராத விதமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போதே வழியிலேயே ஜெகதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்த ஜெகதீஷ் சூர்யா ரசிகர் மன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க நாமக்கல் மேட்டுத் தெருவில் உள்ள ஜெகதீஷ் வீட்டிற்கு நேற்று இரவு நடிகர் சூர்யா சென்றார்.
ஜெகதீஷனின் மனைவி ராதிகா மற்றும் 3 வயது பெண் குழந்தைக்குக் கண் கலங்கியவாறு நடிகர் சூர்யா ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications