நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாமக்கல்லில் முதல்வருக்கு வரலாறு காணாத வரவேற்பு! 13 கி.மீ.தூரம் அணி வகுத்து நின்ற 1 லட்சம் பேர்!

Google Oneindia Tamil News

நாமக்கல்: நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாமக்கல் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வரலாறு காணாத வகையில் வரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கிறார் ராஜேஷ்குமார் எம்.பி.

13 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு லட்சம் பேரை திரட்டி நாமக்கல் மாவட்ட எல்லையில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து செந்தில்பாலாஜியின் சாதனையை முறியடித்துள்ளார் ராஜேஷ்குமார்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தனியாரிடம் வாங்குற கடனுக்கு அரசு பொறுப்பேற்காது -அமைச்சர் பெரியகருப்பன் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தனியாரிடம் வாங்குற கடனுக்கு அரசு பொறுப்பேற்காது -அமைச்சர் பெரியகருப்பன்

நாளை நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் தமிழகம் முழுவதுமிருந்து 10,000 பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாமக்கல் மாநாடு

நாமக்கல் மாநாடு

திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள் - நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் - பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் - நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை நாமக்கல்லில் நடைபெறுகிறது.

அனுமதி பேட்ஜ்

அனுமதி பேட்ஜ்

காலை 9:30 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு தலைப்புகளின்கீழ் பேச்சாளர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். திமுக நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களுக்கு வந்த அழைப்பிதழுடன் இணைக்கப்பட்டுள்ள அனுமதி பேட்ஜை கையுடன் எடுத்து வந்தால் மட்டுமே மாநாடு திடலில் அனுமதிக்கப்படுவார்கள். இதனிடையே இது தொடர்பாக நேற்று அமைச்சர் கே.என். நேரு விடுத்த அறிவுறுத்தலில், திமுக நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் காலை 8.30 மணிக்கு முன்னரே அவரவர் இருக்கைகளில் அமர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 முதல்வர் பயணம்

முதல்வர் பயணம்

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நாமக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வரலாறு காணாத வகையில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க திட்டமிட்ட நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார், சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு லட்சம் பேரை திரட்டி மாஸ் காட்டியிருக்கிறார். கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி கொடுத்த வரவேற்பைக் காட்டிலும் ஒரு படி மேலாக வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தார் ராஜேஷ்குமார்.

பென்ஸ் வாகனம்

பென்ஸ் வாகனம்

மாவட்டப் பொறுப்பாளர் என்ற முறையில் ராஜேஷ்குமாரையும், அமைச்சர் மதிவேந்தனையும் நாமக்கல் மாவட்ட எல்லையில் தனது பென்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், மாநாடு முன்னேற்பாடுகள் பற்றி கேட்டறிந்திருக்கிறார். இதனிடையே எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் நாமக்கல் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்க 40,000க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்திருந்தது கவனிக்கத்தக்கது.

English summary
Chief Minister Stalin in Namakkal: நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாமக்கல் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வரலாறு காணாத வகையில் வரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கிறார் ராஜேஷ்குமார் எம்.பி.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X