Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழைய பாசம் மறக்கல! தேடிப் போய் பேசிய தங்கமணி.. அதிமுக வேட்பாளரை கட்டி அணைத்த கேபி ராமலிங்கம்.. ஆஹா!

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி இருவரும் கைகுலுக்கி உரையாடினர். மேலும், அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை கட்டியணைத்து பேசினார் கேபி ராமலிங்கம்.

நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, கடந்த 20ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டன. இதனைத்தொடர்ந்து வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலர்களிடம் தாக்கல் செய்து வருகின்றனர்.

BJP candidate KP Ramalingam and former AIADMK minister Thangamani shook hands and had a conversation

திமுக கூட்டணியில், நாமக்கல் லோக்சபா தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கொமதேக தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையொட்டி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

நாமக்கல் லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்ட வர்த்தகப் பிரிவு அமைப்பாளர், பரமத்தி ராகா ஆயில் மில் உரிமையாளர் தமிழ்மணி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் தமிழ் மணி. இவர் தமிழ்நாடு வேளாண் பல்கலை மேலாண்மைக்குழு மற்றும் நிதிக்குழு உறுப்பினராக கடந்த 2005ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை பணியாற்றி உள்ளார்.

நாமக்கல் சேலம் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தில் இருந்து, நாமக்கல் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமையில், முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா, எம்எல்ஏக்கள் பரமத்திவேலூர் சேகர், சங்ககிரி சுந்தரராஜ், நாமக்கல் நகர செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் வேட்பாளர் தமிழ்மணி, மாவட்ட ஆட்சியர் உமாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதிமுக மாற்று வேட்பாளராக, தமிழ்மணியின் மகள் டாக்டர் யாழினி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாமக்கல் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக, அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். நேற்று நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், நாமக்கல் நகர தலைவர் சரவணன், தமாகா மாவட்ட தலைவர் கோஸ்டல் இளங்கோ, ஐஜேகே மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துராஜா, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பொன்னுசாமி உள்ளிட்ட திரளான பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அங்கு வேட்பாளர் பாஜக கே.பி.ராமலிங்கம் தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் உமாவிடம் தாக்கல் செய்தார். பாஜக மாற்று வேட்பாளராக மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ்குமார் மனு தாக்கல் செய்தார். முன்னதாக, வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த கேபி ராமலிங்கம், முதல் தளத்தில் காத்திருந்தார். அப்போது அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்து கொண்டிருந்தார்.

இதையடுத்து, கேபி ராமலிங்கம், அங்கு காத்திருப்பதை அறிந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, தேடிச் சென்று, கேபி ராமலிங்கத்தைச் சந்தித்துப் பேசினார். இருவரும் கைகுலுக்கி சிறிது நேரம் உரையாடினர். அதிமுக வேட்பாளர் தமிழ் மணியை கட்டியணைத்து உரையாடினார் கேபி ராமலிங்கம்.

சில மாதங்களுக்கு முன்பாக அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில், தற்போது அதிமுக - பாஜக இடையே லோக்சபா தேர்தல் களத்தில் உக்கிரமாக மோதல் நடைபெற்று வரும் நிலையில், நாமக்கல் லோக்சபா தொகுதியில் அதிமுக - பாஜக வேட்பாளர்கள் கட்டித்தழுவிப் பேசியது அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+