குழந்தைகளை கடத்திய ராசிபுரம் அமுதா.. காவலில் எடுக்கிறது போலீஸ்.. என்னென்ன தகவல் வருமோ!
குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அமுதாவிடம் சிபிசிஐடி விசாரணை ஆரம்பிக்க உள்ளனர்.
Recommended Video
ராசிபுரம்: குழந்தைகளை கடத்தி விற்ற அமுதாவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தை கடத்தல் வழக்கில் கொல்லிமலையை சேர்ந்த ராணி, இளையராணி, தனலட்சுமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான அதிர்ச்சி ஆடியோவில்தான் தெரியவந்தது அமுதாவை பற்றி. நர்ஸாக இருந்து 2012-ல் ஓய்வு பெற்றவர். காட்டூர் காட்டுக்கொட்டாய் வள்ளியம்மாள் நகரைச் சேர்ந்தவர்.

கறுப்பு, சிவப்பு நிற குழந்தைகளுக்கு ஏற்றபடி ரேட் பேசி விற்று வந்திருக்கிறார். இதற்கு லட்சக்கணக்கில் பணத்தையும் பெற்றிருக்கிறார். இந்தவிஷயம் கேள்விப்பட்டு, தமிழகமே அதிர்ந்து போனது.
இதுசம்பந்தமாக அமுதாவையும், அவருக்கு உதவியாக இருந்த கணவர் உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். வழக்கு உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கும் மாறியது. மொத்தமாக இந்த வழக்கில் இதுவரை 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. விசாரணையில், கொல்லிமலையில் வசித்து வரும் பழங்குடி மக்களை குறிவைத்துதான் குழந்தை விற்பனை நடந்து வந்திருக்கிறது.
இப்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமுதா உள்ளிட்ட 8 பேரையும் தனித்தனியாக 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நாமக்கல் மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு அளித்திருந்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட்டும், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அமுதா உட்பட கடத்தல் கும்பலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications