Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலின் முகமெல்லாம் ஒரே பூரிப்பு! ராஜேஷ்குமார் எம்.பிக்கு செம கவனிப்பு! நாமக்கல் ருசிகரம்!

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு தாம் எதிர்பார்த்ததை போலவே முழு வெற்றியடைந்ததால் முதல்வர் ஸ்டாலின் முகத்தில் பூரிப்பைக் காண முடிந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கிய நினைவுப்பரிசு முதல்வர் ஸ்டாலினை மிகவும் ஹேப்பியாக்கியது.

ஏனெனில் இதுவரை முதலமைச்சருக்கு யாரும் வழங்காத வகையில் புதுமையான முறையில் அந்த நினைவுப்பரிசு இருந்தது தான் காரணம்.

 நாமக்கல் மாநாடு

நாமக்கல் மாநாடு

நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நாமக்கல்லில் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டு பொறுப்பை முதலில் சீனியர் மாவட்டச் செயலாளர்கள் வசம் ஒப்படைக்க திட்டமிட்ட முதல்வர் ஸ்டாலின் பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை இளம் மாவட்டச் செயலாளரான ராஜேஷ்குமார் வசம் ஒப்படைத்தார். அவரும் தன்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை முதல்வர் கொடுத்திருக்கிறாரே எனக் கருதி இரவு பகல் பாராமல் உழைத்து இன்று முதலமைச்சரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

முதல்வர் பூரிப்பு

முதல்வர் பூரிப்பு

இதனிடையே மாநாட்டில் பேசி முடித்த பிறகு முதலமைச்சரின் முகத்தில் அப்படியொரு பூரிப்பைக் காண முடிந்தது. பேசி முடித்த பிறகு புன்னகைத்த முகத்துடன் வெந்நீர் அருந்திய ஸ்டாலின், ராஜேஷ் குமார் எம்.பி.யை பார்த்ததும் அவருக்கு ஒரு சபாஷ் போட்டார். இதையடுத்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முதல்வருக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசும் அவரை கவரும் விதமாக இருந்தது. அந்த நினைவுப்பரிசை சுட்டிக்காட்டி தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் ஏதோ பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

 குறைபாடுகள்

குறைபாடுகள்

பொதுவாகவே கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசு விழாக்களில் ஏதேனும் குறைகளோ, ஏற்பாடுகள் தாம் எதிர்பார்த்தது போல் இல்லாவிட்டாலோ, பேசி முடித்தவுடன் எந்த ரியாக்‌ஷனையும் வெளிக்காட்டாமல் முதலமைச்சர் ஸ்டாலின் புறப்பட்டு விடுவார். மனதிற்கு பிடித்தது போலவும், தாம் எதிர்பார்த்தது போலவும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் இருந்தால் மட்டுமே இது போன்று பேசி முடித்த பிறகு கலகலப்பாக பூரிப்போடு பேசுவார் முதல்வர் ஸ்டாலின்.

பட்டு பொன்னாடை

பட்டு பொன்னாடை

மேலும், ராஜேஷ்குமார் எம்.பி.க்கு பொன்னாடை அணிவித்த போது அதை அப்படியே கழுத்தில் போடாமல், முழுமையாக அதை விரித்து போர்த்தி அவரை பெருமைப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின். பொதுவாக எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் இப்படி அணிவிக்க மாட்டார். இதிலிருந்தே நாமக்கல்லில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டின் மூலம் முதல்வர் ஹேப்பி அடைந்திருப்பதை உணர முடிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+