ஆப்பாயிலுக்கு ஆப்பு.. சர்ருனு சரியுதே முட்டை விலை! பறவைகாய்ச்சல்.. யார் கிளப்பி விட்டாங்கனு தெரியல!
நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 20 பைசா குறைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 90 பைசா குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பறவை காய்ச்சல் அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் முட்டை நுகர்வு குறைந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே விலை சரிந்துள்ளதாக கூறுகின்றனர் நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள்.
ஆந்திரா, தெலுங்கானா, கேரள மாநிலங்களில் சில கோழி மற்றும் வாத்து பண்ணைகளில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு உச்சபட்ச கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழகத்திலிருந்து குறிப்பாக நாமக்கல்லில் இருந்து நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் கேரளா, ஆந்திராவுக்கு முட்டை ஏற்றி சென்று வரும் நிலையில் தமிழகத்திலும் நோய் தொற்று பரவாமல் இருக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனை சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்பு குழுவினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கேரளா மாநிலத்தில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லையிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவக் குழுக்களில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், இரண்டு கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்திற்குள் வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த பிறகு அனுமதிக்கப்படுவதாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சில கிராமங்களில் பறவை காய்ச்சல் காரணமாக 2 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பறவை காய்ச்சல் அச்சம் எதிரொலியாக தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 20 காசுகள் சரிந்து இருக்கிறது. இன்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் தலைவர் சிங்கராஜ் தலைமையில் கூடியது. அதில் முட்டை விலையை 20 காசுகள் குறைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்த முட்டை விலை நான்கு நாட்களாக குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 20 பைசாவும் ஒரு வாரத்தில் 90 காசுகளும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு அச்சம் காரணமாகவும் உற்பத்தி காரணமாகவும் முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளதாக கூறுகின்றனர். இந்த நிலையில் முட்டை சாப்பிட்டால் பறவை காய்ச்சல் பரவுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது பொதுவாக பறவை காய்ச்சல் பறவைகளில் இருந்து மனிதனுக்கு பரவ வாய்ப்பு இருக்கிறது. சிக்கன் சாப்பிடுவதால் பறவை காய்ச்சல் வர வாய்ப்பு இல்லை. காரணம் சிக்கனை அதிக வெப்ப நிலையில் சமைக்கும் போது அதில் உள்ள வைரஸ் இறந்துவிடும்.
அதேபோல்தான் முட்டையை நன்றாக வேக வைத்து சாப்பிடும்போது எந்த பிரச்சினையும் வராது. அதே நேரத்தில் ஆப்பாயில், ஒன்சைடு ஆம்லெட், கலக்கி என வேகவைக்கப்படாத முட்டை அல்லது பச்சை முட்டையை சாப்பிடுவதால் நோய் பரவும் அபாயம் இருக்கிறது. அதுவும் மிகவும் அரிதான நிகழ்வின் போது மட்டுமே.. இந்த நிலையில் முட்டை சாப்பிட்டால் பறவை காய்ச்சல் வரும் என்ற விதியின் காரணமாக விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒரு முட்டை 4.20 காசுகளுக்கு நாமக்கல்லில் விற்பனை செய்யப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications