இட்லி மாவு பாக்கெட் போட ரேஷன் அரிசி.. கோழிப்பண்ணைக்கு செல்லும் மூட்டைகள்.. நாமக்கல் கலெக்டர் சுளீர்
நாமக்கல்: ரேஷனில், ரேஷன்தாரர்களுக்கு அரிசியை முறைகேடாக விற்று, அவைகளை கடத்தும் சம்பவத்தில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்களின் ரேஷன் கார்டு பறிமுதல் செய்யப்படும்" என்று போலீசார் பலமுறை வார்னிங் தந்துள்ளனர்.. ஆனாலும், கடத்தல்கள் இன்றுவரை நடந்து கொண்டிருக்கின்றன. எனவேதான், தமிழக எல்லைகளில் போலீஸார் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், நாமக்கல் மாட்டத்தில் மீண்டும் ஒரு கொடுமை நடந்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கென வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை கேரளா, ஆந்திரா, கர்நாடகா என மற்ற மாநிலங்களுக்கு கடத்தி செல்வது பெருகி கொண்டிருக்கிறது..

ரேஷனில் வழங்கப்படும் அரிசியை, குறைந்த விலையில் பெற்று, அதையே பாலிஷ் செய்து, அதிக விலைக்கு மீண்டும் நம்மிடமே விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பலமுறை புகார்கள் எழுகின்றன.. இதில், சிலர், இட்லி மாவு அரைத்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதற்காகவே, இந்த ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி கொள்கிறார்களாம்.
கோழிப்பண்ணைக்கு ரேஷன் அரிசி
ரேஷன் அரிசியில் இட்லி நன்றாக வருவதால்,நேரடியாகவே அரிசி மில்களுக்கு ரேஷன் அரிசியை மூட்டைகளில் கடத்தி செல்லப்படுவதாகவும் புகார்கள் அதிகரித்துவிட்டது. இப்படித்தான் 2 மாதங்களுக்கு முன்பு, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே புதுமண்டபத்தூர் பகுதியில், கடத்தல் நபர் ஒருவர் வேனில் சிக்கினார்..
பவானியை சேர்ந்த பாலச்சந்தர் (37) என்பவர் அந்த நபர், 65 சாக்கு மூட்டைகளில் 1625 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி கொண்டு சென்றபோது பிடிபட்டார்... அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, வெப்படை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து ரேஷன் அரிசியை வாங்கி, வையப்பமலையில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு விற்பனை செய்கிறாராம் பாலச்சந்தர்..
ஒருபக்கம் இட்லி மாவுக்கும், மறுபக்கம் கோழிப்பண்ணைக்கும் ரேஷன் அரிசி பயன்படுத்துவது நாமக்கல்லில் அதிகரித்துள்ளது.. சமீபத்தில்கூட, நாமக்கல் அடுத்த வள்ளிபுரத்தில் இருந்து வாழவந்தி செல்லும் சாலை வழியாக 90 மூட்டைகள் ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது...
கன்னக்குறிச்சி மூட்டைகள்
அதேபோல சில நாட்களுக்கு முன்புகூட, கன்னங்குறிச்சியில் ரேஷன் அரிசியை வாங்கி, நாமக்கல் மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்த ஜெகதீசனை போலீசார் கைது செய்திருந்தனர்.. அவரிடமிருந்து 1,750 கிலோ ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்..
நாளுக்கு நாள் இந்த கடத்தல் அதிகமாகிவிட்டதால், இதுகுறித்த முக்கிய எச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ளார். கோழிப் பண்ணைகளில் ரேஷன் அரிசி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.
பறிமுதல் நடவடிக்கை
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா நாமக்கல்லில் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தல் குறைந்துள்ளது; கடத்தல் வழக்கில் 56 மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. நடப்பாண்டில் ரூ.1.06 கோடி மதிப்புள்ள 878 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ரூ.1.06 கோடி மதிப்புள்ள 878 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறியிருப்பது நாமக்கல் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அத்துடன், கடத்தலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை தீவிரமாகும் என்று தெரிவித்துள்ளது, நம்பிக்கையை ரேஷன்தாரர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications