நாமக்கல் மணல் கடத்தல்.. லாரி, கார் சிக்கிய போது நடந்த ட்விஸ்ட்.. சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்
நாமக்கல்: கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் மணலை திருடி மோகனூர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி விற்பனை செய்வதாக நாமக்கல் மாவட்ட எஸ்பி விமலாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நாமக்கல்-திருச்சி சாலையில் வளையப்பட்டி பகுதியில் வாகன சோதனை நடத்தினார். அதில் பிடிப்பட்டவர்களுக்கு உதவிய விவகாரத்தில் நாமக்கல் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கரூர், நாமக்கல் மாவட்டங்களில் காவிரி ஆறு பாய்ந்தோடுகிறது. இங்கு அடிக்கடி மணல் திருட்டு நடைபெறுகிறது. மணல் திருடர்களை போலீசாரும் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் மணலை திருடி மோகனூர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நாமக்கல்-திருச்சி சாலையில் வளையப்பட்டி பகுதியில் வாகன சோதனை நடத்தினார்.

அப்போது கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் இருந்து லாரியில் மணல் கடத்தி வந்ததும், அதற்கு ஒரு கார் பாதுகாப்பாக வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து லாரியை அங்கிருந்த போலீசாரையும், காரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் என்பவரையும் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வர கூடுதல் எஸ்பி கூறிவிட்டு, போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
சிறிது நேரத்தில் லாரி மட்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்தது. ஆனால் கார் வரவில்லை. மாறாக காரை ஓட்டி வரச்சொன்ன சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மட்டும் போலீஸ் நிலையம் வந்தார். இதில் அதிர்ச்சி அடைந்த கூடுதல் எஸ்பி காரை பற்றி விசாரித்தபோது, 'கார் ஸ்டார்ட் ஆகவில்லை என்பதால், உரிமையாரை எடுத்து வரச்சொல்லிவிட்டு வந்துவிட்டதாக' சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கூறியிருக்கிறார்.
இதனால் சந்தேகம் அடைந்த கூடுதல் எஸ்பி, இது குறித்து விசாரணை நடத்தினார். அப்போது மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கார் மற்றும் அதன் உரிமையாளரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தப்பவிட்டதும், அதற்கு ஏட்டு கோவிந்தராஜன் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடுதல் எஸ்பி பரிந்துரை செய்தார். இதையடுத்து மணல் கடத்தல் விவகாரத்தில் லாரிக்கு பாதுகாப்பாக வந்த காரை தப்பவிட்ட புகாரில் மோகனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், போலீஸ் ஏட்டு கோவிந்தராஜன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து எஸபி விமலா உத்தரவிட்டார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications