என் புருஷன் குழந்தை மாதிரி.. என்னால வாழவே முடியாது.. கதறும் நாமக்கல் ஆனந்த் மனைவி
Recommended Video
நாமக்கல்: "என் புருஷன் ஒரு குழந்தை மாதிரி.. சண்டை போட்டாகூட, நான்தான் முதல்ல போய் பேசுவேன்.. அவர் இல்லாம என்னால வாழவே முடியாது" என்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ஆனந்தின் மனைவி போலீசில் தெரிவித்துள்ளார்.
பரமத்திவேலூர் அருகே உள்ள செங்கப்பள்ளியை சேர்ந்தவர் டாக்டர் ஆனந்த். இவருக்கு 50 வயதாகிறது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார். மனைவி தமிழ்செல்வி ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார். 17 வயதில் அபர்ணா என்ற மகள் பிளஸ் 2 படிக்கிறார்.

ரத்த வெள்ளம்
பரமத்திவேலூர் பேட்டையில் ஈஎன்டி ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். ஆஸ்பத்திரி மேல்மாடியில் குடும்பத்தினர் உள்ளனர். 2 தினங்களுக்கு முன்பு, செங்கப்பள்ளியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்ற ஆனந்த், துப்பாக்கியால் தாடையில் வைத்து சுட்டுக்கொண்டார். இதில், டாக்டர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

விசாரணை
இவர் எதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய மர்மமாகவே உள்ளது. இவருக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளது. ஆஸ்பத்திரி தவிர, பெட்ரோல் பங்க், அரிசி மண்டி வைத்திருக்கிறார். இதுபோக, நிலபுலன்களும் எக்கச்சக்கமாக உள்ளன. சொத்து அதிகமாக இருப்பதால், யாராவது டாக்டரை மிரட்டி வந்தார்களா, அல்லது வேறு யாருடனாவது டாக்டருக்கு தொடர்பு உள்ளதா, அல்லது கடன் பிரச்சனை ஏதாவதில் சிக்கி இருந்தாரா என்று தெரியவில்லை.

மனைவி
இந்த தற்கொலை சம்பந்தமாக நாமக்கல் போலீசார் 3-வது நாளான விசாரணையில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இன்று அவரது மனைவி தமிழ்செல்வியிடமும் டிஎஸ்பி பழனிசாமி விசாரணை நடத்தினார். அப்போது அவர் சொன்னதாவது:

சமாதானம்
"எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும்.. போகும்.. அது வழக்கமானதுதான். அப்பவெல்லாம் என் கணவர் என்கிட்ட பேசமாட்டார். சண்டை போட்டாலும், நான்தான் முதலில் போய் பேசி சமாதானம் செய்வேன். அவர் ஒரு குழந்தை போல. ஆனால், இது போல திடீரென சம்பந்தமே இல்லாத பிரச்னைக்காக இப்படி ஒரு முடிவை எடுத்துட்டார். அவரை நான் இழந்து விட்டேன்.. அவர் இல்லாம என்னால வாழவும் முடியாது" என்று கதறி அழுதார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications