Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரை தொடர்ந்து நாமக்கல்லுக்கும் பேரிடி.. கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கும் டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்று பழமொழி கூறுவார்கள். அது நாமக்கல்லுக்கு நன்றாகவே பொருந்தும். ரஷ்யாவிடம் ஆயில் வாங்கியதால் கோபம் அடைந்த அமெரிக்கா, இந்தியாவிற்கு போட்டி நாடுகளைவிட அதிக வரி விதித்துள்ளது. அமெரிக்காவில் இந்திய முட்டைக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதால், நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் பண்ணையாளர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள்.

கொங்கு மண்டலத்தில் உள்ள தொழில் நகரங்களில் நாமக்கல் முக்கியமான இடத்தில் இருக்கிறது. நாமக்கல் தான் தென்னிந்தியாவிலேயே லாரி தொழிலில் கொடி கட்டி பறக்கிறது. அதேபோல் கோழிப்பண்ணைகள் அதிக அளவில் உள்ளன. நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் சுமார் 7 கோடி முட்டையின கோழிகள் மூலம் தினசரி 5 கோடியே 50 லட்சம் முட்டைகள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. முட்டை மற்றும் கறிகோழிகள் தமிழ்நாட்டிற்கே இங்கு தான் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. கறிகோழிகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

Namakkal egg exports halted due to 25 percent import tax imposed in the US

நாமக்கல் முட்டை

நாமக்கல்லில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு முட்டை துபாய், பக்ரைன், கத்தார், ஓமன், ஆப்பிரிக்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு மாதந்தோறும் சுமார் 15 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவிற்கு முட்டையின் தேவை அதிகமானது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா அரசு, இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்திருந்தது. இதனையடுத்து முதல் கட்டமாக கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டது.

5 லட்சம் முட்டைகள்

குளிர்சாதன வசதி கொண்ட 21 கன்டெய்னர்களில் தலா 4.75 லட்சம் முட்டைகள் என சுமார் ஒரு கோடி முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கன்டெய்னர் 30 நாட்களில் அமெரிக்கா சென்றது. அதனை தொடர்ந்து அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி அதிகரிக்கும் என பண்ணையாளர்கள் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் டிரம்ப் எடுத்த முடிவால் தமிழ்நாட்டின் நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளருக்கு இடியாக மாறி உள்ளது.

டிரம்ப் அறிவிப்பு

ஏனெனில் ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி முதல் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்க அரசு 25 சதவீதம் வரி விதித்தது. இந்த வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்தார். அதேநேரம் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்பட அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா வரியை இந்த அளவிற்கு விதிக்கவில்லை. இதனால் இந்தியாவில் பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் முட்டை

திருப்பூரில் பின்னாலடை தொழிலுக்கு பேரிடியாக பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் நாமக்கல் பகுதியை சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது. 25 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பால் நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது.

வரி விதிப்பு அதிகம்

அண்டை நாடுகளை விட அதிக வரி விதிப்பு உள்ளதன் காரணமாக இந்திய முட்டைகளை வாங்க அமெரிக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் முட்டை ஏற்றுமதி தடைபட்டு உள்ளதாக நாமக்கல் பகுதியை சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலையில் இருக்கிறார்கள். அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி செய்து பயனடைய காத்திருந்த கோழிப்பண்ணையாளர்கள் இப்போது அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிப்பில் இருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+