நாமக்கல்லில் விஏஓ சிவகாமியின் தலைமுடியை இழுத்த பிரபலம்.. நீ எங்க போய் வேணும்னாலும் சொல்லு.. ஒரே பரபர
நாமக்கல்: அனுமதியின்றி மண் அள்ளியவர்களை தட்டிக்கேட்டுத் தடுத்து நிறுத்திய பெண் விஏஓ வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெண் விஏஓ சிவகாமி மீது தாக்குதலில் ஈடுபட்ட சீனிவாசன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது.. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருவதால், விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் மெஞ்சனூர் பாலமேடு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் சிவகாமி.. இவருக்கு காட்டுபாளையம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விசாரிக்க சென்றிருக்கிறார்.. அப்போது அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பிறகு சிவகாமி தன்னுடைய வீட்டிற்கு சென்றுவிட்டார்.. ஆனால், சீனிவாசன் என்பவர் சிவகாமியின் வீடு புகுந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த சிவகாமி, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சீனிவாசனை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
பெண் விஏஓ மீது தாக்குதல்
பெண் விஏஓ மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை நாமக்கல்லில் ஏற்படுத்தியிருக்கிறது,.. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த கிராம நிர்வாக அலுவலர் நலச் சங்கத்தினர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்..
பெண் விஏஓ சிவகாமி மீது தாக்குதலில் ஈடுபட்ட சீனிவாசன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டனர்.. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாமலை காட்டம்
அந்தவகையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாமக்கல்லில் கிராம நிர்வாக அதிகாரி மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தனது அதிகார வரம்பிற்குள் நடந்து வந்த சட்டவிரோத மணல் திருட்டை தடுத்து நிறுத்தியதே அவர் செய்த ஒரே குற்றம். இன்றைய தமிழகத்தில் ஒரு நேர்மையான அதிகாரிக்கு கிடைக்கும் கொடுமையான பரிசு இதுதான்.
இது ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல. ஒவ்வொரு முறையும், மணல் மாபியா, போதைப்பொருள் மாபியா, நிலக் கொள்ளையர்களுக்கு எதிராக பேச துணிந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை வன்முறை மூலம் அமைதியாக்குகின்றனர்.
திமுக ஆட்சியில், எதுவும் சட்டபூர்வமாக இல்லை. எதுவும் பாதுகாப்பானதல்ல. எந்த நேர்மையான அதிகாரிக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டமின்மை ஆட்சியாக மாறிவிட்டது, குண்டர்கள் இயல்பாக சுற்றிதிரிகின்றனர்" என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
படுகாயம் - அனுமதி
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் விஏஓ சிவகாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொல்லும்போது, ''என்னுடைய பெயர் சிவகாமி. நான் திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம் பாலமேடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணி செய்து வருகிறேன்.
நேற்று காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு போனேன். அலுவலகத்தில் இருக்கும் பொழுது கிராமத்தில் மண் அள்ளுவதாக எனக்கு தகவல் வந்தது. நான் பீல்டுக்கு போய் மண் அள்ளுபவர்களிடம் கேட்கும் பொழுது அவர்கள் ஒரு சீட்டை காண்பித்தார்கள். அந்த சீட்டு என்னுடைய வட்டம் கிடையாது. என்னுடைய கிராமம் கிடையாது.
முத்துக்குமார், கிருபா
வேறு கிராமத்தில் இருக்கும் சீட்டை காண்பித்தார்கள். அவர்களுடைய பெயர் முத்துக்குமார், கிருபா. அவர்களிடம் முறையாக அனுமதி பெற்று மண் அள்ளுங்கள் என்று சொன்னேன்.
"நாங்கள் எல்லா பக்கமும் இப்படித்தான் செய்கிறோம். உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ. நீ எங்க வேணாலும் சொல்லு நான் பாத்துக்குறேன். உன்னை லாரி ஏற்றிக் கொன்று விடுவேன்" என்று என்னை மிரட்டினார்கள்.

மண்ணை கொட்டிட்டு போங்க
நான் உடனே ஆர்.ஐக்கு போன் பண்ணி சொன்னேன். "நீங்கள் மண் அள்ளுவதும் இப்படிப் பேசுவதும் தவறு. மண்ணை அங்கேயே கொட்டி விட்டு வண்டி எடுத்துக் கொண்டு போங்க'' என்றார்..
அவர்கள் மண்ணை கொட்டிவிட்டுப் போய்விட்டார்கள். இந்த சூழ்நிலையில் அங்கே இருந்த கிருபா என்பவர் முஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் சொல்லியுள்ளனர்.
அவளை கொன்றுவிடுவேன்
அவர் என்னுடைய கணவருக்கு போன் செய்து உன்னுடைய மனைவி செய்வது சரியில்ல. எப்படி என்னை மண் அள்ளக் கூடாது என தடுக்க முடியும் நான்தான் மண் அள்ளுவேன். அப்படித்தான் அள்ளுவேன்.. அதை மீறித் தடுத்தால் அவளைக் கொன்று விடுவேன் என்று அவதூறாக பேசினார்.
என்னுடைய வீட்டில் நான், என்னுடைய மாமியார், என்னுடைய ஒரு வயசு குழந்தை நாங்க மட்டும் தான் இருந்தோம். அதைத் தெரிந்து கொண்டு வீட்டுக்கு வந்த சீனிவாசன் "எப்படி என்னை மண் அள்ளக்கூடாது என்று சொல்லலாம்" என்று என்னுடைய முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி தாக்குதலில் ஈடுபட்டார். இதில் கையில் காயம் ஏற்பட்டு நான் அங்கே மயக்கம் அடைந்தேன். இந்த தாக்குதல் குறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளேன்'' என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications