நாமக்கல்லில் நைலானுடன் நின்ற மனைவி.. ஆன்தி-வேயில் கிடைத்த "ஆண் நண்பர்".. இரவில் கலங்கடித்த கலாவதி
நாமக்கல்: பேச்சுமூச்சு இல்லாமல் கட்டிலில் கிடந்த கணவனை கண்டு அலறி துடித்தார் கலாவதி.. இப்போது கலாவதி சேலம் ஜெயிலில் அடைபட்டுள்ளார்.. என்ன நடந்தது?
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், ஆலத்தூநாடு என்ற பகுதியில் வசித்து வருகிறார் ரவிச்சந்திரன்.. 42 வயதான இவர் ஒரு விவசாய கூலி தொழிலாளி ஆவார்.

தம்பதி: இவரது மனைவி பெயர் கலாவதி.. 40 வயதாகிறது.. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள் இருக்கிறார்கள்.. இதில் ஒரு மகளுக்கு கல்யாணமாகிவிட்டது.. ரவிச்சந்திரன் - கலாவதி தம்பதி இருவருமே கேரளாவுக்கு எஸ்டேட் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.. அப்படி சென்றுவரும்போதுதான் சக்திவேல் என்பவர் கலாவதிக்கு அறிமுகமானார்.. திருப்புலிநாடு, கீரைக்காட்டை சேர்ந்தவர் இந்த சக்திவேல் .. 32 வயதாகிறது.
இவருக்குமான பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.. இதனால், அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.. இந்த விஷயம், கணவர் ரவிச்சந்திரனுக்கு தெரிந்துவிட்டது. இதனால் கலாவதியை கண்டித்துள்ளார்.. ஆனால், கலாவதி இந்த பேச்சை காதில் போட்டுக் கொள்ளாததால், தம்பதிக்குள் இது தொடர்பாக தகராறு வெடித்துள்ளது.
ஆண் நண்பர்: எப்ப பார்த்தாலும் கணவன் தனக்கு அட்வைஸ் தந்துவருவதால், கடுப்பான கலாவதி, ஒரு வருடத்துக்கு முன்பே கோபித்துக் கொண்டு அவரது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.. எனினும், ரவிச்சந்திரன், தன்னுடைய மாமியார் வீட்டுக்கு சென்று, கலாவதிக்கு புத்தி சொல்லி, சமாதானம் செய்து, 2 மாதத்துக்கு முன்பு, மறுபடியும் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
ஆனால், அப்போதும் சக்திவேலுவுடனான தொடர்பை விடவில்லை கலாவதி.. மறுபடியும் போனிலேயே மூழ்கியிருக்கிறார்.. மறுபடியும் தம்பதிக்குள் சண்டை வந்துள்ளது.. நேற்று முன்தினமும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் தாங்காமல் மனைவியை அடித்து உதைத்தார் ரவிச்சந்திரன்.
ரவிச்சந்திரன்: கணவர் உயிரோடு இருக்கும்வரை, கள்ளக்காதலனுடன் நிம்மதியாக வாழ முடியாது என்று நினைத்த கலாவதி, ரவிச்சந்திரனை கொலை செய்ய முடிவு செய்தார்.. நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டுக்கு வெளியே படுத்திருந்தார் ரவிச்சந்திரன்.
நள்ளிரவு 12 மணிக்கு சக்திவேலுக்கு போனை போட்டு வரவழைத்தார் கலாவதி.. பிறகு இருவரும் சேர்ந்து, ரவிச்சந்திரனின் கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கினார்கள்.. இதில் மூர்ச்சையாகி ரவிச்சந்திரன் விழுந்துவிடவும், அதற்கு பிறகு விறகு கட்டையால் அடித்தே கொன்றார்கள்.. பிறகு மறுநாள் காலையில், அக்கம் பக்கத்தில் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, பேச்சுமூச்சின்றி கட்டிலில் அசைவற்று தன்னுடைய கணவர் கிடப்பதாக அழுது ஒப்பாரி வைத்தார் கலாவதி.
விசாரணை: என்னதான் ஓவர்ஆக்டிங் செய்தாலும், கலாவதி போலீசில் சிக்கிவிட்டார்.. செங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கலாவதி, அவரது கள்ளக்காதலன் சக்திவேல் இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். அவர்களிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications