அந்தரங்கம்.. 2 செல்போன்களில் நிரம்பி வழிந்த ஆபாசம்.. கடைசியில் தூக்கில் தொங்கி.. சரண்யாவின் பரிதாபம்

நாமக்கல் பெண் மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: கள்ளக்காதலனுடன் உறவு வைத்த சரண்யா கடைசியில் தூக்கில் பிணமாகத்தான் தொங்கி கொண்டிருந்தார்.. தற்கொலையா? கொலையா என்று தெரியவில்லை.. ஆனால், தற்கொலைக்கு முன்பு கள்ளக்காதலனுடன் சரண்யா இருந்துள்ளார்.. சரண்யாவின் 2 செல்போன்களிலும் ஆபாச வீடியோக்களும் இருந்துள்ளன.. இது சம்பந்தமாக ராசிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில், 29 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், இளம்பெண் கொலை செய்யப்பட்டதாகவும் அதன் பின்னணியில் மேலும் பலருக்குத் தொடர்பிருப்பதாகவும் கணவன் மற்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சரண்யா

சரண்யா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள பகுதி ஆயில்பட்டி.. இங்கு வசித்து வருபவர் ரமேஷ்.. இவரது மனைவி பெயர் சரண்யா.. ரமேஷூக்கு 41 வயதாகிறது.. சரண்யாவுக்கு 29 வயதுதான் ஆகிறது.. 12 வயது மூத்தவர். நீரிழிவு நோயாளி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.. ரமேஷ் ஒரு டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.. சரண்யா, 2 ஏக்கர் நிலத்தில் விவசாயத்தை கவனித்து வந்தார்.

சடலம்

சடலம்

இந்நிலையில், கடந்த 6ம் தேதி விடிகாலையில் தன்னுடைய வீட்டில் சரண்யா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து சரண்யாவின் சடலத்தை மீட்டு விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான், அதற்கு முந்தைய நாள், அதாவது அக்டோபர் 5ம் தேதி ராத்திரி சரண்யா பாலாஜி என்பவருடன் அதே வீட்டில் சரண்யாவுடன் அவர் தங்கி இருந்துள்ளார் என்பது தெரியவந்தது.

 பாலாஜி

பாலாஜி

ஆயில்பட்டி அடுத்த உடையார்பாளையத்தை சேர்ந்தவர்தான் பாலாஜி.. அவருக்கும் 29 வயசுதான் ஆகிறது. டெயிலரிங் கிளாஸ் போகும்போது, பாலாஜி அறிமுகமாகி உள்ளார்.. கள்ளக்காதலும் மலர்ந்துள்ளது.. ஆனால் வீட்டுக்கு விஷயம் தெரிந்து ரமேஷ் பிரச்சனை செய்யவும், கள்ளக்காதலனை சரண்யா கைவிட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஆவேசம்

ஆவேசம்

இதையடுத்து, பாலாஜி மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. எனினும் சரண்யா குடும்பத்தினர் கடுமையான ஆத்திரத்தில் உள்ளனர்.. சம்பவத்தன்று முதல்நாள் பாலாஜி சரண்யாவுடன் தங்கியிருந்தது தெரிந்தும், ஏன் கொலை வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள்.. அதுமட்டுமல்ல, சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த பாலாஜி, தண்ணி அடித்துவிட்டு சரண்யாவை அடித்துள்ளதை, சரண்யா மகளே கண்ணால் பார்த்திருக்கிறார்.

 சடலம்

சடலம்

சரண்யா காலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தபோது, பாலாஜி அங்கேதான் போதையில் விழுந்து கிடந்திருக்கிறார்.. இதை குடும்பத்தினர் பார்த்துள்ளனர்... மேலும் சரண்யாவின் 2 செல்போன்களில் ஒரு அந்தரங்க போட்டோவை குடும்பத்தினரே பார்த்துள்ளனர்.. ஆனால், அந்த செல்போன்களில் பல அந்தரங்க வீடியோ இருந்தும், அவை அழிக்கப்பட்டுள்ளன.. அதை ஏன் போலீசார் விசாரிக்கவில்லை என்றும் குடும்பத்தினர் கேள்வி எழுப்புகிறார்கள்.

 செல்போன்கள்

செல்போன்கள்

சரண்யா யார் யாருடன் பேசினார் என்று அந்த செல்போன்களை ஆய்வு செய்யவும் இல்லை, சரண்யா வங்கி கணக்கில் இருந்து பாலாஜிக்கும், அவரது நண்பர்களும் பணம் போயுள்ளது என்று குடும்பத்தினர் சொல்கிறார்கள்.. இவ்வளவு தகவல்கள் தெரிந்தும் அவைகள் குறித்து விசாரணையை போலீசார் முடுக்கி விட வேண்டும், குறைந்தபட்சம் அந்த செல்போனில் உள்ள அந்த அந்தரங்க வீடியோ அழித்தது குறித்தாவது விசாரிக்க வேண்டும் என்று கதறுகிறார்களாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+