நாங்குநேரி டூ நாமக்கல்.. கொலை களங்களாக மாறிய பள்ளிக் கூடங்கள்.. தமிழகத்திற்கு என்னதான் ஆச்சு?
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் இரு சம்பவங்கள் இப்படி நடந்த நிலையில், இப்போது நாமக்கல்லிலும் பள்ளிக்கூடம், கொலைக் களமாக மாறியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவங்கள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் பொன்னாக்குடியை அடுத்த மருதகுளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே ஜூலை மாதத்தில் மோதல் ஏற்பட்டது. இதில், ஒருதரப்பு மாணவர்கள் மற்றொரு தரப்பினரை தாக்கியதில் இரு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 2 ம் தேதி நெல்லை, நாங்குநேரி, விஜயநாராயணம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே பாட்டிலில் இருந்த தண்ணீரை சிந்தியதற்காக தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டில் இருந்த மாணவரை மற்றொரு மாணவர் அரிவாளால் தாக்கிய சம்பவம் நிகழ்ந்தது. இந்த இரு சம்பவங்களைத் தொடர்ந்து, மாணவர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் மோதல் ஏற்பட்டு ஆதிதிராவிட மாணவர் மீது சாதிய ரீதியாக தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த ஓராண்டில் நெல்லை மாவட்டம், வள்ளியூரில் மட்டும் மூன்றாவது முறை பள்ளி மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி உள்ள அருகே நவலடிப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். லாரி ஓட்டுநர். இவரது மகன் ஆகாஷ் (16) வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். ஆகாஷின் வகுப்பில் செல்லிபாளையத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகனும் படித்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். வகுப்பறை வாசலில் ஆகாஷ் கழட்டி வைத்திருந்த காலணி காணாமல் போயுள்ளது. இதனால், மிகவும் கோபமடைந்த ஆகாஷ் என்னுடைய செருப்பை யார் மறைத்து வைத்தீர்கள் என்று கூறி சில மாணவர்களைத் திட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்போது, மற்றொரு மாணவர் ஒருவர் உன்னுடைய காலணியை நான்தான் எடுத்து வைத்துள்ளேன். எதற்காக திட்டுகிறாய் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, இருவருக்கிமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவா் தாக்கியுள்ளனர். இந்நிலையில், திடீரென ஆகாஷ் சுருண்டு கீழே விழுந்துள்ளார். சிறிது நேரமாகியும் எழுந்திருக்கவில்லையாம். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால், ஆகாஷ் எழுந்திருக்கவில்லை.
சுயநினைவு இல்லாமல் மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். மாணவர்கள் பயந்துபோய் உடனடியாக தலைமை ஆசிரியர் புஷ்பராஜனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, உடனடியாக ஆகாஷை ஆம்புலன்ஸ் மூலமாக எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இருப்பினும், அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த எருமப்பட்டி போலீஸார் மாணவர் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஆகாஷை தாக்கிய மாணவர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஆகாஷின் பெற்றோர் கூறுகையில், எங்களுடைய மகன் ஆகாஷுக்கு வலிப்பு வந்ததாகவும், அப்போது மயங்கி கீழே விழுந்து விட்டதாகவும் கூறினர். இதையடுத்து, உடனடியாக எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றோம். அப்போது, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அங்கு இரவில் சென்று பார்த்தபோது எங்களது மகன் கண்கள் மேலே சொருகி உயிரிழந்த நிலையில் கிடந்தான். இச்சம்பவம் தொடர்பாக மற்றொரு மாணவரைப் பிடித்து எருமப்பட்டி காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர். எங்களுடைய மகன் உயிரிழப்புக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications