வாகன சோதனை செய்த போலீஸையே.. சிக்க வைத்து சம்பவம் செய்த நாமக்கல்.. என்ன நடந்தது?
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருசெங்கோட்டில் வாகனச் சோதனையின் போது பைக் ஓட்டிகளிடம் எஸ்ஐ உள்பட இரண்டு போலீசார் வசூல் வேட்டை நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து எஸ்.ஐ உள்ளிட்ட இரண்டு போலீசாரையும் சஸ்பெண்ட் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதுமே போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்ட எஸ்.பி ராஜேஸ்கண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதுமே போக்குவரத்து விதிகளை மீறுவோரின் வாகனங்களுக்கு சோதனையில் அபராதம் விதிக்கப்படுகிறது.

இதற்காக போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி, சட்டம்- ஒழுங்கு மற்றும் போக்குவரத்துப் பிரிவு போலீஸாரும், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் வாகனச் சோதனையில் ஈடுபடுகிறார்கள். அப்போது ஓட்டுர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால், தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டினால், ஒரே வாகனத்தில் 3 பேர் வந்தால், மது போதையில் வாகனம் ஓட்டினால், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டினால், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால், ஆட்டோக்களில் அதிக நபர்களை ஏற்றினால், கனரக வாகனங்களில் முறையான ஆவணங்கள் இல்லாவிட்டால் இ-செல்லான் மூலம் வழக்கு பதிவுசெய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இப்படி, தினமும் நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனில் இருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், திருச்செங்கோட்டில் பணியாற்றும் ஒரு சில போலீஸார், விதிமுறைகளை மீறி இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களிடம் வாகன சோதனை என்ற பெயரில வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
அண்மையில் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகேஇரண்டு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் அப்போது, அந்த வழியாக வரும் இரு சக்கர வாகனங்களைத் தடுத்து நிறுத்திய அவர்கள், அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.பின்னர் வாகன ஓட்டுநர்களிடம் பணம் கொடுத்துவிட்டுச் செல்லும்படி போலீஸார் கூறுகிறார்கள். வாகன ஓட்டுநர்களும் தங்களிடம் இருக்கும் பணத்தை அவர்களிடம் திணித்துவிட்டு, அங்கிருந்து வாகனங்களைக் கிளப்பிக்கொண்டு வேகமாக சென்றுள்ளார்கள்.
இந்நிலையில் போலீசின் வாகன சோதனையால் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு வாகன ஓட்டுநர் இதை மறைந்திருந்து போலீஸுக்குத் தெரியாமல் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிட்டார்.அந்த வீடியோ வேகமாக பரவியதால் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரு கட்டத்தில் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றது, இதையடுத்து விசாரணைக்கும் உத்தரவிட்டனர்.
விசாரணையில், வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கியது, திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன், போலீஸ் ஏட்டு குணசேகரன் ஆகிய இரண்டு பேர்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது
இந்த நிலையில், போலீஸ் ஏட்டு குணசேகரனை நாமக்கல் மாவட்ட எஸ்.பி ராஜேஸ்கண்ணன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். இதேபோல், உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜனை சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்திய இரண்டு போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications