நாமக்கல் கள்ளக்காதலி கணவருடன் சென்றதை கண்ட கார் மெக்கானிக்.. இறுதியில் முட்டாள்தனமான முடிவு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே பாறை தோட்டம் பகுதியை சேர்ந்த நாகராஜ் கார் மெக்கானிக். இவருக்கும், நெல்லையை சேர்ந்த பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நாகராஜூக்கும், எரையம்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஆனால் அந்த பெண், தனது கணவருடன் சென்றதால் கார் மெக்கானிக் தவறான முடிவெடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே பாறை தோட்டம் பகுதியை சேர்ந்த 37 வயதாகும் நாகராஜ், கார் மெக்கானிக் ஆக உள்ளார். இவருக்கும், நெல்லையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நாகராஜூக்கும், எரையம்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறதாம்.

அதேநேரம் நாகராஜூன் கள்ளக்காதலிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதற்கிடையில் நாகராஜ் தனது கள்ளக்காதலியான அந்த பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறி சின்ன முதலைப்பட்டி பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாகராஜூன் மனைவி கணவருடன் கோபித்து கொண்டு நெல்லையில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நாகராஜுடன் குடும்பம் நடத்திய கள்ளக்காதலி திடீரென கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது கணவருடன் போய் விட்டார். இதனால் நாகராஜ் மனவேதனையுடன் காணப்பட்டிருக்கிறார். மேலும் அவர் பாறை தோட்டத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள ஒரு அறையில் நாகராஜ் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களின் உதவியுடன் நாகராஜை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்ததது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நாமக்கல் வேலகவுண்டம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலி கணவருடன் சென்றதால், காதலன் எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications