கள்ளக்காதலுக்காக கொலை - ஒரு செல்லில் 2 சிம்... மூன்றாவதுக்கு ஆசைப்பட்ட கணவனின் கழுத்தறுத்த மனைவி
மனைவியை விட்டு இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்த விசைத்தறி தொழிலாளி மீண்டும் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டதால் 2வது மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
நாமக்கல்: தூங்கிக்கொண்டிருந்த கணவனின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய இரண்டாவது மனைவியை திருச்செங்கோடு போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலுக்காக இந்த கொலை நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் கல்யாண சுந்தரம் என்பதாகும். இவர் தண்ணீர் பந்தல் பாளையத்தில் வசித்து வருகிறார். எம்ஜிஆர் நகரில் விசைத்தறி தொழில் செய்து வந்த அவருக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்.

நெசவு பட்டறையில் தன்னுடன் வேலை செய்து வந்த பூங்கொடி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஒரு செல்லில் 2 சிம் போடுவது போல இரண்டு மனைவிகள் இருந்தும் கல்யாண சுந்தரத்திற்கு காமம் அடங்கவில்லை. பட்டறையில் வேலை செய்த பல பெண்களுடன் அவ்வப்போது லீலை தொடர்ந்தது. பட்டறையிலேயே பெண்களுடன் உறவை தொடர்ந்தார் கல்யாண சுந்தரம்.
முதல் மனைவி போல இரண்டாவது மனைவி பூங்கொடியால் கண்டு காணமல் இருக்க முடியவில்லை. கல்யாண சுந்தரத்துடன் சண்டை போட்டார்.
வாக்குவாதம் அடிதடி வரை போனது ஆனாலும் கல்யாணசுந்தரம் அடங்கவில்லை. பூங்கொடியை தறி பட்டறைக்கு வரவேண்டாம் என்று கூறி தடுத்தார் கல்யாண சுந்தரம்.
கணவன் மீது ஆத்திரம் அதிகமாகவே, பூங்கொடி சமயம் பார்த்து காத்துக்கொண்டிருந்தார். போதையில் உறங்கிக்கொண்டிருந்த கணவனின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினர். அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கல்யாண சுந்தரத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.கழுத்து அறுக்கப்பட்டிருந்த விதம் போலீசாரின் சந்தேகத்தை அதிகரித்தது.
பல கோணங்களில் விசாரித்த காவல்துறையினர், கல்யாண சுந்தரத்தின் நடத்தையும், பூங்கொடி கல்யாண சுந்தரம் இடையே இருந்த பிரச்சினையும் தெரியவந்தது. சந்தேகத்தை பூங்கொடி மீது திருப்பிய போலீசார், தங்கள் பாணியில் விசாரிக்கவே, நடந்த உண்மைகளை பூங்கொடி போலீசில் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் பூங்கொடியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவி குழந்தைகளை விட்டு விட்டு இரண்டாவது திருமணம் செய்த நிலையிலும் வேறு பெண்களுடன் ஏற்பட்ட தொடர்பு உயிரை காவு வாங்கியுள்ளது.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications