17 வயது சிறுமியுடன் "உறவு.." இறுகும் கோர்ட் பிடி.. 20 கோடி கொடுத்து தப்புகிறார் இங்கிலாந்து இளவரசர்
நியூயார்க்: 17 வயது சிறுமியுடன் பாலியல் உறவு வைத்த இங்கிலாந்து இளவரசர் ஆன்ட்ரூ, கோர்ட்டு நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.20 கோடி கொடுக்க உள்ளார்.
இங்கிலாந்து ராணி எலிசபெத். விரைவில் இவரது 2வது மகன் ஆன்ட்ரூ 62. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த 37 வயது பெண், ஆன்ட்ரூ மீது பலாத்கார குற்றச்சாட்டை எழுப்பினார். இது பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியது. மேலும் 2021 இறுதியில் அந்த பெண் நியூயார்க் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ‛‛ஆன்டரூவின் நண்பர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவரது வற்புறுத்தலில் 2001ல் நான் 17 வயது மைனர் பெண்ணாக இருந்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளானேன். இங்கிலாந்து இளவரசர் ஆன்ட்ரூ என்னுடன் 3 முறை படுக்கையை பகிர்ந்தார்'' என கூறியிருந்தார்.

தள்ளுபடிக்கு வாதம்
இந்த மனு நியூயார்க் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆன்ட்ரூ தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில், ‛‛சட்ட நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பதற்காக ஜெப்ரி எப்ஸ்டீன் மூலம் 5 மில்லியன் அமெரிக்க டாலர் அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக 2009ல் ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது. இதனால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றார்.

விசாரணைக்கு ஏற்பு
ஆன்டரூ தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். ‛‛டாலர் கைமாறியதாக கூறப்படும் விவகாரம், பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டில் உள்ள உண்மை நிலையை அறிய வேண்டிய கட்டாயத்தில் கோர்ட்டு உள்ளது. தற்போதைய சூழலில் வழக்கு குறித்து கோர்ட்டு எதுவும் கூற முடியாது. வழக்கு தொடர்ந்தவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளார். இதனால் விசாரணை மேற்கொள்வது அவசியம். வழக்கு தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகள் தான் உண்மை எதுவென்று உறுதி செய்யும்'' எனக்கூறினார்.

சிக்கல்
மேலும் வழக்கின் முதற்கட்ட விசாரணை வரும் விரைவில் துவங்கும் என ஜனவரியில் அறிவித்தார். இதனால் இளவரசர் ஆன்ட்ரூக்கு புதுச்சிக்கல் ஏற்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆன்ட்ரூ ஆஜராக வேண்டும். ஆஜராகாத பட்சத்தில் அவரது புகழுக்கு களங்கம் ஏற்படும். அத்துடன் கோர்ட்டு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.

ரூ.20 கோடி
இந்நிலையில் வழக்கை முடித்து கொள்ள ஆன்ட்ரூ முடிவு செய்தார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பு வழக்கறிஞரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கும் நன்கொடையாக கோடிக்கணக்கில் பணம் தருவதாக உடன்பாடு எட்டப்பட்டது. வழக்கை முடித்து வைக்க கோர்ட்டில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆன்ட்ரூ கோர்ட்டு நடவடிக்கையில் இருந்து தப்பித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இளவரசர் ஆன்ட்ரூ தரப்பில் எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறைந்தபட்சம் 2 மில்லியன் பவுண்ட் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.20 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

ராணி உதவ வாய்ப்பு
மேலும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஆன்ட்ரூ ஏற்கனவே திருமணமானவர். இவர் தனது முதல் மனைவி சாராவை விவாகரத்து செய்தார். இவருக்கும் நஷ்டஈடாக கோடிக்கணக்கில் பணம் வழங்கினார். இதற்காக சில சொத்துகளை அவர் விற்றார். இதையடுத்து பொருளாதார நெருக்கடியில் உள்ள அவரால் எப்படி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பணம் வழங்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் ஆன்ட்ரூவின் தாயான ராணி எலிசபெத் உதவியுடன் அவர் பணம் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications