அமெரிக்கா முதலீடு பெற இந்திய அதிகாரிகளுக்கு ரூ2,100 கோடி லஞ்சம்.. அதானிக்கு அமெரிக்கா பிடிவாரண்ட்!
டெல்லி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான SECI எனப்படுகிற Solar Energy Corporation of India - நிறுவனத்திடம் இருந்து தமிழ்நாடு, ஆந்திரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் மின்சார வாரியங்கள் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காக மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது அதானி குழுமம்; இதன் மூலம் SECI - இடம் இருந்து திட்டங்களைப் பெற்ற அதானி குழுமம் அமெரிக்காவில் ரூ20,000 கோடி முதலீடுகளைப் பெற்றது; ஆனால் அதிகாரிகளுக்கு இப்படி லஞ்சம் கொடுத்ததை மறைத்து முதலீடுகளைப் பெற்றது அதானி குழுமம் என்ற வழக்கில் அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் SECI நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் மூலம் பல்வேறு சூரிய ஒளிமின்சார உற்பத்தித் திட்டங்களை அதானி குழுமம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக அதானி குழுமம் அமெரிக்காவில் ரூ20,000 கோடி முதலீடுகளைப் பெற்றுள்ளது. ஆனால் SECI நிறுவனத்துக்குடனான மாநில அரசின் ஒப்பந்தங்களுக்கு மாநிலங்களின் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து இந்த ரூ20,000 கோடியை பெற்றது அதானி குழுமம் என்பது வழக்கு. இந்த வழக்கில்தான் நியூயார்க் நீதிமன்றம் அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் கவுதம் அதானி, அவரது உறவினரான சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் என்கிற நிதி ஆய்வு நிறுவனமானது ஏற்கனவே அதானி குழுமம் மீது பங்குச் சந்தை மோசடி புகார்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்திய பங்குச் சந்தை ஆணையத்தின் தலைவரான மாதவி புச் மற்றும் அதானி குழுமங்களிடையேயான வர்த்தக உறவு தொடர்பாகவும் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் உருவான புயல் இந்தியாவில் இன்னமும் ஓயவில்லை. இந்த நிலையில் ரூ2100 கோடி லஞ்சம் தர அதானி குழுமம் முன்வந்த வழக்கு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
-
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
வேலையை காட்டும் டிரம்ப்! ஈரான் உடனான டீலிங்கில்.. திடீர் ட்விஸ்ட்! சீரியஸாகும் பஞ்சாயத்து! -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
நார்வே செஸ் சாம்பியனான பிரக்ஞானந்தா.. கைக்கொடுத்து உதவிய அதானியின் ‘கர்வ் ஹாய்' திட்டம் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை!












Click it and Unblock the Notifications