கொரோனா.. ஒரே நாளில் உலகம் முழுக்க 283,860 பேர் பாதிப்பு.. அமெரிக்கா, பிரேசிலில் நிலைமை மோசம்!
நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 283,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக பிரேசில், அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.
இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. வேக்சின் பயன்பாட்டுக்கு வந்த நிலையிலும் கொரோனா கேஸ்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனா
உலகம் முழுக்க மொத்தம் 117,735,817 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.2,611,523 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். 93,399,116 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 42010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எத்தனை பேர்
அங்கு மொத்தம் 29,741,546 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் இதுவரை 538,571பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அங்கு மொத்தம் 11,244,624பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா டிஸ்சார்ஜ்
இந்தியாவில் இதுவரை 157,966 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 10,897,486 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்னொரு பக்கம் பிரேசிலில் நிலைமை மோசமாகி வருகிறது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 36136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 11,055,480 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசில்
பிரேசிலில் இதுவரை 266,614 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.பிரேசிலில் மிக மோசமாக ஒரே நாளில் 1114 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 4,333,029 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ரஷ்யாவில் இதுவரை 89,473 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
-
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications