பக்கத்து வீட்டுக்காரரின் "இதயத்தை" வெட்டி சமைத்த ஆசாமி.. அதிர்ந்த உறவினர்கள்.. காரணம் என்ன தெரியுமா
அமெரிக்காவில் பக்கத்து வீட்டுக்காரரின் இதயத்தை வெட்டி சமைத்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
நியூயார்க்: அமெரிக்காவில் பேய்களை விரட்டுவதாக கூறி பக்கத்து வீட்டுக்காரரின் இதயத்தை வெட்டி உருளைக்கிழங்குடன் சேர்த்து சமையல் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவருடைய இந்த கொலையானது தற்போது வரை அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன். இவர் ஒரு கொகைன் போதைப்பொருள் வியாபாரியாவார். அமெரிக்கா உலகின் தலைச்சிறந்த நாடாக இருந்தாலும், இது மூன்று விஷயத்திற்காக பிரபலமானதாகும். ஒன்று துப்பாக்கி, இரண்டாவது பாலியல் தொழில், மூன்றாவது போதைப்பொருள். அமெரிக்காவில் கிடைக்காத போதை பொருட்களே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அமெரிக்காவில் ஏராளமான போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன.
இது மிகப்பெரிய லாபம் கொழிக்கும் தொழிலாகும். இந்த தொழிலில் தீவிரமாக ஈடுபட்டவர்தான் மேற்குறிப்பிட்ட லாரன்ஸ் பால் ஆண்டர்சன். அமெரிக்காவில் போதைப்பொருள் உற்பத்தி செய்யப்படவில்லை என்றாலும், அமெரிக்காவின் ஆதரவால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் போதைப்பொருட்கள் உற்பத்தி வெகு ஜோராக நடைபெற்று வருகிறது. இதனை இங்கிருந்து அமெரிக்காவுக்கு கடத்துவது. அமெரிக்காவுக்கு வந்த சரக்கை பத்திரமாக வேறு ஒருவருக்கு கைமாற்றுவதுதான் என எல்லாவற்றிற்கும் ஆட்கள் இருக்கின்றனர்.

வழக்கு
இதில் இரண்டாவது பணியில்தான் லாரன்ஸ் பால் ஆண்டர்சன் ஈடுபட்டிருந்தார். அதேநேரத்தில் இவருக்கு பேய் குறித்த அச்சம் நீண்ட ஆண்டுகளாக இருந்திருக்கிறது. இந்த பயத்திலிருந்து வெளியே வருவதற்காக பல பாதிரியார்களை சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர்கள் சொன்னதை போல சில விஷயங்களை செய்திருக்கிறார். அதன் பின்னர் ஓரளவு பயம் தெளிந்திருக்கிறது. இப்படி இருக்கையில் ஓக்லஹோமா பகுதியில் தன்து அத்தை மற்றும் அவர்களுடைய பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். இவர்கள் வீட்டில் நீண்ட நாட்களாக பேய் தொல்லை இருப்பதாக அத்தை கூறியிருக்கிறார்.

இதயம்
இது தொடர்பாக அமானுஷ்ய புத்தகங்களை படித்திருக்கிறார். அதில் யாராவது ஒரு பெண்ணின் இதயத்தை வெட்டி அதை வைத்து சடங்கு செய்ய வேண்டும் என்ற எழுதப்பட்டிருக்கிறது. இதனை நம்பிய லாரன்ஸ் பால் ஆண்டர்சன் யாருடைய இதயத்தை வெட்டுவது என்று யோசித்திருக்கிறார். அப்போதுதான் இவரது பார்வை பக்கத்து வீட்டில் இருந்த ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் (41) எனும் பெண்மணி மீது திரும்பியுள்ளது. எனவே அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். இதற்கு இடையூறாக வந்த அவரது கணவர் லியோன் பை, மற்றும் அவர்களது 4 வயது பேத்தி என மேலும் இருவரை கொலை செய்துள்ளார். பின்னர் ஆண்ட்ரியாவின் இதயத்தை வெட்டி எடுத்துள்ளார்.

கொலை
அதனை தனது வீட்டிற்கு கொண்டு வந்து சடங்கு செய்து உருளை கிழங்குடன் சேர்த்து சமைத்திருக்கிறார். அதன்பின்னர் இதனை தனது வீட்டில் இருந்த அத்தை உள்ளிட்டோருக்கு பரிமாறியுள்ளார். கறியை பார்த்தவுடன் சந்தேகமடைந்த ஆண்டர்சனின் அத்தை கேள்வியெழுப்பியுள்ளார். ஆண்டர்சனும் உண்மையை மறைக்காமல் கூறியுள்ளார். இதை கேட்ட குடும்ப உறுப்பினர்கள் ஷாக்காகியுள்ளனர். எனவே உணவை சாப்பிட மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த ஆண்டர்சன் அத்தை மற்றும் சக உறுப்பினர்களையும் கொலை வெறியோடு தாக்கியுள்ளார். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தண்டனை
இந்த சம்பவம் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் ஆண்டர்சனுக்கு சுமார் 5 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.












Click it and Unblock the Notifications