அமெரிக்காவில் இறங்கிய இந்திய ராணுவம்.. ‛மெட்ராஸ் ரெஜிமென்ட்' வீரர்கள் திடீரென போனது ஏன்? ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று அமெரிக்காவில் இறங்கிய இந்திய ராணுவத்துக்கு, அந்த நாட்டு ராணுவம் உற்சாக வரவேற்பு வழங்கி உள்ளது. நம் நாட்டின் ராணுவ படைப்பிரிவில் ஒன்றான ‛மெட்ராஸ் ரெஜிமென்ட்' வீரர்கள் அமெரிக்கா சென்றது ஏன்? அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையே வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 30 ஆண்டுகளாக மேம்பட்டு வந்த இந்தியா - அமெரிக்கா உறவு டிரம்பின் வரி விதிப்பால் சீர்குலைந்துள்ளது.

amid-of-donald-trump-tariffs-indian-army-lands-in-us-for-joint-military-exercise

அமெரிக்காவின் வரி விதிப்பு நம் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, தொழில்களை முடக்கும். இதனால் நம் நாட்டு சீனாவுடன் உறவை புதுப்பித்துள்ளதோடு, ரஷ்யா உடனான உறவை வலுப்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி டிரம்ப் தொடர்ந்து நம் நாட்டை சீண்டி வருகிறார். இதனால் அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவு மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதற்கு சில காலம் பிடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

அமெரிக்காவில் இறங்கிய ராணுவம்

இந்நிலையில் தான் டிரம்பின் வரி விதிப்புக்கு நடுவே அமெரிக்கா - இந்திய ராணுவம் கைகோர்த்துள்ளன. நம் நாட்டின் ராணுவ வீரர்கள் திடீரென்று அமெரிக்காவில் தரையிறங்கி உள்ளனர். அமெரிக்காவின் அலஸ்காவில் உள்ள ஃபோர்ட் வைன்ரைட்டில் என்ற இடத்துக்கு இந்திய ராணுவ வீரர்கள் சென்றுள்ளனர்.

நம் நாட்டில் சி 17 குளோப்மாஸ்டர் III விமானத்தில் ராணுவ வீரர்கள் அமெரிக்கா சென்றவர்களுக்கு அந்த நாட்டின் ராணுவம் உற்சாக வரவேற்பு வழங்கியது. அங்கு அமெரிக்க ராணுவ வீரர்களுடன் சேர்ந்து நம் நாட்டின் ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி மேற்கொள்ள உள்ளன.

அமெரிக்காவுடன் கூட்டு பயிற்சி

இந்த கூட்டு பயிற்சி நேற்று தொடங்கியது. செப்டம்பர் 14ம் தேதி வரை இந்த கூட்டு பயிற்சி நடைபெற உள்ளது. இந்த கூட்டு பயிற்சியின்போது நம் நாட்டின் வீரர்களும், அமெரிக்க வீரர்களும் ஹெலிபோர்ன் பயிற்சி, மலை ஏற்றம், யுஏஎஸ், எதிர்-யுஏஎஸ் மற்றும் கூட்டு தந்திர மேலாண்மை உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர். க்ஷ

மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள்

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛அமெரிக்காவின் அலஸ்காில் உள்ள ஃபோர்ட் வைன்ரைட்டுக்கு சென்றுள்ளன். 21வது யுத் அபியாஸ் 2025- நிகழ்ச்சிக்காக இந்தியா - அமெரிக்க ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

மெட்ராஸ் ஜெிமென்டை பட்டாலியன்கள், அமெரிக்க 11வது வான்வழிப் பிரிவின் ஒரு பகுதியான ஆர்க்டிக் வுல்வ்ஸ் பிரிகேட் காம்பாட் டீமின் "Bobcats" என்றும் அழைக்கப்படும் 1வது பட்டாலியன், 5வது காலாட்படை படைப்பிரிவின் வீரர்களுடன் பயிற்சி பெறுவார்கள்.

2 வாரம் வரை பயிற்சி

இந்த 2 வார கால பயிற்சியில் ஹெலிபோர்ன் ஆபரேஷன், மலையேறும் பயிற்சி, ஆபத்து கால மீட்பு நடவடிக்கை, போர்கால மருத்துவ உதவி, வான் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த வார்பேர் சிஸ்டம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர். அதுமட்டுமின்றி UAS - Counter UAS ஆபரேஷன்களை மேற்கொள்ள உள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர் பயிற்சியில் துப்பாக்கிச்சுடுவது முதல் உயர் ரக கூட்டு பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

பயிற்சியின் பெயர் என்ன?

உலக நாடுகளுக்கிடையே இத்தகைய கூட்டுப் பயிற்சிகள் நடைபெறுவது இயல்பு தான். குறிப்பாக நட்பு நாடுகளும் சேர்ந்து ராணுவம், விமானம், கடற்படையில் கூட்டு பயிற்சி மேற்கொள்வது அவ்வப்போது நடந்து வருகிறது. இப்படி பலமுறை இந்தியா - அமெரிக்கா வீரர்கள் கூட்டு பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இருநாடுகளும் தங்களின் யுக்தி மற்றும் போர் பயிற்சியை மேம்படுத்தும் வகையில் இது நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஒவ்வொரு நாடுகளும் கூட்டு பயிற்சிக்கு தனித்தனியாக பெயர்கள் சூட்டி உள்ளன. அந்த வகையில் இந்தியா - அமெரிக்கா ராணுவ கூட்டு பயிற்சியின் பெயர் ‛யுத் அபியாஸ்' (Yudh Abhyas). தற்போது 2025ம் ஆண்டுக்கான ‛யுத் அபியாஸ் 2025' என்ற பெயரில் இந்த கூட்டு பயிற்சி நடைபெற உள்ளது. இந்த வேளையில் இந்தியா - அமெரிக்கா படைகளுக்கு இடையே பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகள் பரிமாறி கொள்ளப்படும். இந்த பயிற்சி என்பது இந்தியா - அமெரிக்கா ஆகிய நாடுகளில் மாறி மாறி நடக்கும்.

கவனம் பெற்றது ஏன்?

2021 மற்றும் 2023ம் ஆண்டுக்கான கூட்டு பயிற்சி அமெரிக்காவின் அலஸ்காவிலும், 2022, 2024ம் ஆண்டுக்கான கூட்டு பயிற்சி முறையே உத்தரகாண்ட் அவுலி, ராஜஸ்தானின் மகாஜன் ஃபீல்ட் ஃபயரிங் ரேஞ்ச் உள்ளிட்ட இடங்களில் நடந்தது.

இப்போது மீண்டும் அமெரிக்காவின் அலஸ்காவில் இந்தியா - அமெரிக்கா ராணுவ கூட் பயிற்சி தொடங்கி உள்ளது. ஆனால், இப்போது இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு சரியில்லாத இந்த நேரத்தில், இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் கூட்டு ராணுவப் பயிற்சி அதிக கவனத்தை பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+