Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போருக்கு ரெடியாகுங்கள்! அடுத்தடுத்து போருக்கு தயாராகும் சீனா, ரஷ்யா, இஸ்ரேல், ஈரான்.. மோசமாகும் நிலை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: சீனா, ரஷ்யா, இஸ்ரேல், ஈரான் உள்ளிட்ட பெரிய நாடுகள் அடுத்தடுத்து போருக்கு தயாராகி வருகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்த நாடுகளின் சமீபத்திய பேச்சுக்கள், நடவடிக்கைகள் இது தொடர்பான விவாதத்தை, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஒரு பக்கம் அமெரிக்காவுடனான நீண்ட மோதலுக்கு ரஷ்யா தயாராக வேண்டும் என்று ரஷ்யா நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு அதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளாராம். இரண்டு நாட்டு உறவுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து வாஷிங்டனுக்கு எச்சரிக்கையை அனுப்பி உள்ளோம் என்று துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்து உள்ளாராம்.

israel palestine israel palestine war international

உக்ரைன் - ரஷ்யா போர், ஈரான் - லெபனான் - இஸ்ரேல் போர் ஆகிய போர்கள் காரணமாக அமெரிக்கா - ரஷ்யா ஆகிய இரண்டு நாட்டு மோதல் உச்சம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு நாட்டு பிரிவினை இதுவரை இல்லாத மிகவும் ஆபத்தான கட்டத்தை அடைந்து உள்ளது என்று ரஷ்ய அதிகாரிகளிடம் ரஷ்யா நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்து உள்ளாராம். முக்கியமாக பனிப்போரை விட மோசமான சூழலை இரண்டு நாடுகளும் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போரில் தற்போது மற்ற நாடுகளும் தலையிடும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றது. இந்த விவகாரத்தில் தற்போது ரஷ்யா நேரடியாக கருத்து தெரிவித்து உள்ளது. நேரடியாக இந்த விவகாரத்தில் ரஷ்யா களமிறங்கி உள்ளது. நேற்று ஈரான் தாக்குதலுக்கு முன்பாக ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்புகொள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீவிரமாக முயன்று உள்ளார்.

ஆனால் பெஞ்சமின் நெதன்யாகு எவ்வளவு முயன்றும் புடினுடன் அவரால் பேச முடியவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு நாட்டு ஹாட் லைன் வேலை செய்யாமல் இருந்துள்ளது. ரஷ்யா இந்த ஹாட் லைனை எடுக்காமல் இஸ்ரேலுக்கு போக்கு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

சீனா திட்டம்: இது போக சீனா தைவான் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. தைவானில் இருந்து ஒரு மூச்சு கூட வெளியே போகாத அளவிற்கு தைவானை சீனா தற்போது சுற்றி வளைத்து உள்ளது. தைவான் மீது சீனா எப்போது வேண்டுமானாலும் போர் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனா நாட்டு படைவீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும்.தைவானைச் சுற்றி சீனா பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை நடத்தி வரும் நிலையில்தான்.. போர் நடத்த தயாராக இருங்கள். போர் வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்ளின் பலத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் போர் புரியும் திறனை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்

அமெரிக்கா இரண்டு விதமான நிலைப்பாட்டை எடுத்து உள்ளது. வரலாற்று ரீதியாக தைவானை அமெரிக்கா தனி நாடாக வெளிப்படையாக அங்கீகரித்தது கிடையாது. சில தலைவர்கள் அவ்வப்போது தைவானுக்கு ஆதரவாக பேசினாலும்.. எப்போதும் ஒற்றை சீனா என்ற நிலைப்பாட்டில் மட்டுமே அமெரிக்கா இருந்துள்ளது. ஆனால் சீனாவை சீண்டுவதற்காக தைவானை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. அதோடு சீனாவிடம் இருந்து பாதுகாக்க தைவானுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி வருகிறது.

தைவான் தனி நாடாக மாறினால் அது சீனாவிற்கு பாதுகாப்பு ரீதியாக சிக்கல். உக்ரைன் நேட்டோவில் சேர்வது ரஷ்யாவிற்கு எப்படி சிக்கலோ அப்படித்தான் தைவான் தனி நாடாக மாறினால் சீனாவிற்கும் சிக்கல். ஏற்கனவே கடந்த பல மாதங்களாக தைவான் வான் எல்லைக்குள் தொடர்ந்து சீன போர் விமானங்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தைவான் அமெரிக்காவுடன் அதிகமாக நெருக்கம் காட்டி வருகிறது.

இஸ்ரேல் பிளான்: கடந்த அக்டோபர் 1ம் தேதி இஸ்ரேலில் ஏறக்குறைய 200 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் நாட்டை தாக்கினால்.. பதிலுக்கு "தீர்க்கமான மற்றும் அதிர்ச்சி அளிக்கும்" பதிலடியை அளிப்போம் என்று ஈரான் எச்சரித்து உள்ளது.

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டெரஸிடம் இது பற்றி எச்சரித்து உள்ளார்.

ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் "விரைவில் பதிலடி கொடுக்கும்" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant கடந்த வாரம் கூறினார். இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் துல்லியமான மற்றும் கொடியதாக இருக்கும் என்று உறுதியளித்தார்.

இஸ்ரேல் திட்டம்: கடந்த அக்டோபர் 1 ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த முக்கிய முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் இஸ்ரேல் ஏற்கனவே ஈரானில் எங்கெல்லாம் தாக்குதல் நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஈரானில் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களை இஸ்ரேல் மார்க் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொல்லாஹ்வின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதற்கு பதிலடியாக, அக்டோபர் 1ம் தேதி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று இஸ்ரேல் அமெரிக்கா இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இஸ்ரேல் அமெரிக்கா இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில்.. ஈரானை எப்படி தாக்க வேண்டும்.. எங்கே தாக்க வேண்டும்.. என்று பதிலடி கொடுப்பது பற்றி ஆலோசனைகள் செய்யப்பட்டு உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+